இடுகை இடப்பட்ட நாள்:
08 DEC 2019 2:05PM by PIB Chennai
சிந்தனைகளின் குவிமையமான பல்கலைக்கழகங்கள் துண்டிக்கப்பட்ட தனி அமைப்புகள் அல்ல, சமூகத்தின் அங்கம் என்றும் அவை சமூக மாற்றத்தின் பகுதியாகும் என்றும் குடியரசுத் தலைவர் திரு. ராம்நாத் கோவிந்த் கூறியுள்ளார்.
கல்விசார் சமூகம் புதிய ஞானத்தின் அடிப்படையில் ஆராய்ச்சியில் ஈடுபடுவதாக மட்டுமின்றி மனித சமூகம் நிலைத்திருப்பதற்கான ஞானத்தையும் உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார்.
புவனேஸ்வரில் உள்ள உத்கல் பல்கலைக்கழக பவள விழா நிறைவு நிகழ்ச்சியில் இன்று அவர் உரையாற்றினார்.
விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு அதிகாரமளிப்பதில் மாணவர்களும், ஆசிரியர்களும் உணர்வுபூர்வமாக செயல்பட வேண்டுமென்று குடியரசுத் தலைவர் கூறினார். சுற்றுச்சூழல், சுகாதாரம், கல்வி ஆகியவை தீவிரமாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.
முன்னதாக ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் உள்ள பாருனி மலை அடிவாரத்தில் கட்டப்படவுள்ள பைக்கா போர் வீரர்கள் நினைவிடத்திற்குக் குடியரசுத் தலைவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், நமது வரலாற்றின் புகழ்மிக்க பக்கங்கள் பற்றி மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டுமென்றும், குறிப்பாக நமது முன்னோர்களின் தியாகங்கள் பற்றி இளைய தலைமுறை நன்கு அறிந்திருப்பது தேசக் கட்டுமானத்தின் முக்கியப் பகுதி என்றும் கூறினார்.
****