வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

காப்புரிமை பேச்சுவார்த்தை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

Posted On: 20 NOV 2019 10:47PM by PIB Chennai

ஆர்வமுள்ள நாடுகள் அல்லது பிராந்தியங்களில் உள்ள பல்வேறு காப்புரிமை அலுவலகங்களுடன், இந்திய  காப்புரிமைகள், வடிவமைப்புகள், வர்த்தகச் சின்னங்களின் தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரியின் கீழ் உள்ள இந்திய காப்புரிமை அலுவலகம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஆலோசனைக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தத் திட்டம் தொடக்கத்தில் ஜப்பான் காப்புரிமை அலுவலகம் – இந்திய காப்புரிமை அலுவலகம் இடையே முன்னோட்ட அடிப்படையில், மூன்றாண்டு காலத்திற்கு நடைமுறைக்கு வரும்.

இந்தத் திட்டம் இந்திய காப்புரிமை அலுவலகத்திற்கு கீழ்க்காணும் பயன்களை அளிக்கும்.

காப்புரிமை விண்ணப்பங்களைப் பைசல் செய்வதற்கான கால அவகாசம் குறையும்

காப்புரிமை விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பது குறையும்

காப்புரிமை விண்ணப்பங்களை ஆய்வு செய்வது மற்றும்  சோதிப்பதில் தரம் மேம்படும்

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள், புதிதாக தொடங்கப்படும் தொழில்கள் உட்பட இந்தியக் கண்டுபிடிப்பாளர்களின் காப்புரிமை விண்ணப்பங்களை ஜப்பானில் ஆய்வு செய்வது துரிதப்படுத்தும்

தொழில் வர்த்தக அமைச்சரின் முடிவுப்படி இந்தத் திட்டத்தின் நோக்கம் எதிர்காலத்தில் விரிவுப்படுத்தப்படும். இதன்  அமலாக்கத்திற்குக் காப்புரிமை அலுவலகங்கள் தங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை  தாங்களே வகுத்துக் கொள்ளலாம்.

                                                 ****



(Release ID: 1592824) Visitor Counter : 101


Read this release in: English , Urdu , Hindi , Telugu