நிதி அமைச்சகம்

வரி விதித்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா 2019-க்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 20 NOV 2019 10:41PM by PIB Chennai

          அவசர சட்டத்திற்கு மாற்றாக, வரி விதித்தல் சட்டங்கள் (திருத்த) மசோதா 2019-ஐ அறிமுகப்படுத்துவதற்கு, பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

     உலகெங்கும், நிதி (எண்.2) சட்டம், 2019 (நிதிச்சட்டம்) நடைமுறைப்படுத்தப்பட்டது, நிறுவன வருமான வரி விகிதம் குறைப்பு ஆகியவற்றுக்குப் பிறகான பொருளாதார வளர்ச்சிகளால், முதலீட்டை ஈர்ப்பதற்கும், வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கும், பொருளாதாரத்திற்கு ஒரு உத்வேகத்தை அளிப்பதற்கும் கூடுதலான உந்துதல் அளிக்கும் கூறு தேவைப்பட்டது. வருமான வரிச்சட்டம் 1961 அல்லது நிதிச்சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து இவற்றை எட்ட முடியும் என்றாலும், நாடாளுமன்ற கூட்டம் நடைபெறாத சமயம் என்பதால், வரி விதித்தல் சட்டங்கள் (திருத்த) அவசரச் சட்டம் 2019, சென்ற செப்டம்பர் மாதத்தில் கொண்டுவரப்பட்டது.   

    

 

****

 



(Release ID: 1592729) Visitor Counter : 105


Read this release in: English , Urdu , Hindi