பிரதமர் அலுவலகம்

பிரதமர் நரேந்திர மோடி பில்கேட்ஸூடன் சந்திப்பு

प्रविष्टि तिथि: 18 NOV 2019 8:35PM by PIB Chennai

இந்தியாவில் மூன்று நாள் பயணமாக வந்துள்ள பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின்  இணைத் தலைவர் திரு பில்கேட்ஸை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.11.2019) சந்தித்துப் பேசினார்.  கடந்த செப்டம்பர் மாதம் ஐநா பொதுச் சபை கூட்டத்தின் இடையே நியூயார்க்கில் இருவரும் சந்தித்துப் பேசினர். 

 

சுகாதாரம், ஊட்டச்சத்து, துப்புரவு மற்றும் வேளாண்மைக்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான இந்திய அரசின் முயற்சிகளுக்கு தமது அறக்கட்டளையின் ஆதரவை திரு பில்கேட்ஸ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.  

 

ஊட்டச்சத்து திட்டத்திற்கு முன்னுரிமை அளித்து, தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தின்மூலம் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்காக பிரதமரை திரு பில்கேட்ஸ் பாராட்டினார். 

 

ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு வழிவகுக்கும் நோக்குடன், வேளாண் உற்பத்தி மற்றும் அமைப்புகளின் செயல்திறனை மேம்படுத்த உதவக்கூடிய புதிய ஆலோசனைகளையும் அவர் வழங்கினார். 

 

இந்த சந்திப்பின்போது, கேட்ஸ் அறக்கட்டளையின் முன்முயற்சிகளை பாராட்டிய பிரதமர், அந்த அறக்கட்டளையின் அனுபவம் மற்றும் பொறுப்புணர்ச்சியை அரசு எந்த வகையில் பயன்படுத்திக் கொள்கிறது என்பதையும் சுட்டிக்காட்டினார். சுகாதாரம், ஊட்டச்சத்து, வேளாண்மை மற்றும் பசுமை எரிசக்தி உள்ளிட்ட துறைகளில்,  புள்ளிவிவரங்கள் மற்றும் சாட்சியங்கள் அடிப்படையிலான தலையீடுகள் மற்றும் ஆதரவு, பணிகளை எந்த அளவுக்கு விரைவுபடுத்தும் என்பதையும் அவர் எடுத்துரைத்தார். 

 

திரு பில்கேட்ஸூடன், அவரது இந்திய குழுவைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். 

**************


(रिलीज़ आईडी: 1592123) आगंतुक पटल : 157
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Kannada