எஃகுத்துறை அமைச்சகம்

எதிர்காலத்தில் இந்தியாவின் எஃகு தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 26 OCT 2019 12:15PM by PIB Chennai

இந்தியாவின் எஃகு தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 5 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரம் என்ற இலக்கை அடுத்து இந்தத் தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகுத் துறை அமைச்சர்  திரு தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 

 

     டோக்கியோவில் இன்று நடைபெற்ற அதிகப்படியான எஃகு தேவை பற்றிய உலக அமைப்பின் அமைச்சர்கள் நிலை கூட்டத்தில் உரையாற்றிய அவர், இந்தியாவில் துரிதமான பொருளாதார வளர்ச்சியும், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடும் இருப்பதால், எஃகின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.  அடுத்த ஐந்தாண்டுகளில் அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் துறையில்  ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் அளவுக்கு செலவிட இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் கூறினார். 2030 ஆம் ஆண்டுக்குள் தனிநபர் எஃகு பயன்பாட்டின் அளவை தற்போதுள்ள 72 கிலோகிராம் என்பதை 160 கிலோகிராமாக அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

 

     அதிகப்படியான எஃகு தேவை பற்றிய பிரச்சினை குறித்து பேசிய திரு பிரதான், இந்தத் துறை இந்தியாவில் அரசுக் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டு, சந்தை சக்திகளால் செயல்படுத்தப்படுகிறது என்பதால் பாதிப்பு ஏதும் இல்லை என்றார். 

 

            இந்தக் கூட்டத்திற்கு இடையே அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், ஐரோப்பிய ஆணையத்தின் வர்த்தகப் பிரிவு துணைத் தலைமை இயக்குநர் திருமதி சாந்த்ரா கல்லினாவை சந்தித்துப் பேசினார்.

                                                          ********


(रिलीज़ आईडी: 1589301) आगंतुक पटल : 89
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी