வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

அறிவுசார் சொத்துரிமையை பாதுகாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது: வர்த்தகத்துறை செயலாளர்

Posted On: 16 OCT 2019 12:06PM by PIB Chennai

ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் தொழில் துறைக்காக அக்டோபர் 14 ஆம் தேதி தொடங்கி, 17 ஆம் தேதிவரை கேன்ஸ் நகரில் நடைபெறும் தகவல் தொடர்பு திட்டங்களுக்கான சர்வதேச சந்தையில் இந்திய அறிவுசார் சொத்துரிமைக்கான தகவல் குறிப்பேட்டைத் தொழில் வர்த்தக அமைச்சகத்தால் நிறுவப்பட்டுள்ள சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் கொண்டு வந்துள்ளது.  160 நாடுகளில் பிரபலமாக உள்ள 60 இந்திய அறிவுசார் சொத்துரிமைகள் குறித்த விவரங்கள் இந்தக் குறிப்பேட்டில் இடம்பெற்றுள்ளன.

     கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச சந்தையில் இந்தக் குறிப்பேடு வெளியீட்டு நிகழ்ச்சிக்கு மத்திய வர்த்தகத்துறை செயலாளர் அனுப் வாதவான் அனுப்பியுள்ள செய்தியில், சேவைகள் ஏற்றுமதிக்கு ஊக்கமளிக்க படைப்பார்வத்திற்கும், அசல் தன்மைக்கும் ஊறுவிளைவிப்பதிலிருந்து காப்பு அளிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இந்தத் தொழில் துறையின் எதிர்கால வளர்ச்சிக்கு அறிவுசார் சொத்துரிமை முக்கியத்துவம் வாய்ந்தது என இந்தியா உறுதியுடன் நம்புவதாகவும் அந்தச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.  

     பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் சர்வதேச சந்தையின் இந்திய அரங்கில் 60-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.  இவர்கள் தவிர 115 இந்திய நிறுவனங்களில் இருந்து 250-க்கும் அதிகமான பிரதிநிதிகளும் கலந்து கொண்டுள்ளனர்.

     மேலும் விவரங்களுக்கு https://twitter.com/Sepc_India/status

*****


(Release ID: 1588241) Visitor Counter : 63