வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அரசு இ-சந்தை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

Posted On: 11 OCT 2019 11:11AM by PIB Chennai

யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவுடன் அரசு இ-சந்தை புதுதில்லியில் அக்டோபர் 10, 2019 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.  இதன் மூலம் இ-சந்தை தொகுப்புக் கணக்குகள் (ஜிபிஏ) வங்கி உத்தரவாத செயலுக்கான ஆலோசனை (இ-பிபிஜி) முன்வைப்புத் தொகை (இஎம்டி) உள்ளிட்ட நிதிப் பரிவர்த்தனை சேவைகளை யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா இ-சந்தை இணையத்தில்  பதிவு செய்த பயன்பாட்டாளர்களுக்கு வழங்க முடியும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் ரொக்கம் அல்லாத காகிதம் அல்லாத, வெளிப்படையான பணப்பரிவர்த்தனைக்கு  உதவுவதோடு அரசு நிறுவனங்களுக்கு திறன்மிக்கக் கொள்முதல் முறையையும் உருவாக்கும்.

      அரசு இ-சந்தையின் கூடுதல் தலைமை அதிகாரி எஸ் சுரேஷ் குமார் யூனியன் பாங்க் ஆஃப் இந்தியாவின் தில்லி களப்பொது மேலாளர் எஸ் கே மகாபத்ரா ஆகியோர் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

      அரசு இ-சந்தை ஏற்கனவே 14 பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

---



(Release ID: 1587844) Visitor Counter : 91


Read this release in: English , Urdu , Hindi , Malayalam