பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

பிரதமர் அலுவலக இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை வடக்கு மண்டல சி.ஆர்.பி.எஃப். சிறப்பு டிஜி திரு ஸுல்ஃபிகர் ஹசன் சந்தித்தார்


370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டதற்குப் பிந்தைய நிலை பற்றி விவரித்தார்
ஜம்மு காஷ்மீரில் அமைதியையும், இயல்பு நிலையையும் பராமரிப்பதற்காக துணை ராணுவப்படையினரை அமைச்சர் பாராட்டினார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 OCT 2019 3:51PM by PIB Chennai

வடகிழக்கு பிராந்திய வளர்ச்சித்துறை (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், ஊழியர்நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள்,  அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணை அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்கை, மத்திய ரிசர்வ்  போலீஸ் படையின் (சி.ஆர்.பி.எஃப்) வடக்கு மண்டல சிறப்புத் தலைமை இயக்குநர் திரு. ஸுல்ஃபிகர் ஹசன் இன்று புதுதில்லியில் சந்தித்தார்.

   இந்தச் சந்திப்பின்போது 370-வது பிரிவு  ரத்து செய்யப்பட்டதற்குப் பிந்தைய நிலை பற்றி திரு. ஸுல்ஃபிகர் ஹசன் அமைச்சரிடம் விவரித்தார். ஆகஸ்ட்  5, முடிவுக்குப் பின் நிலைமை இயல்பாக உள்ளது என்று அவர் கூறினார். ஒருசில கட்டுப்பாடுகள் தவிர ஜம்மு காஷ்மீரில் வன்முறைச் சம்பவங்களோ, ஊடரங்கு உத்தரவோ இல்லை என்றும் அவர் கூறினார். வெற்றிகரமான அமர்நாத் யாத்திரை குறித்த புகைப்படங்கள் அடங்கிய புத்தகத்தையும் அவர், அமைச்சரிடம் அளித்தார்.

     இந்த மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ராணுவமும், துணை ராணுவப் படைகளும், அளித்துள்ள பங்களிப்பிற்கு அமைச்சர் பாராட்டு தெரிவித்தார். சமீப ஆண்டுகளில், மிகவும் அமைதியான பண்டிகைக் காலமாக இந்த ஆண்டு உள்ளது என்று டாக்டர் சிங் கூறினார். பக்ரீத், சுதந்திரதினம்  போன்ற விழாக்கள் அமைதியாகக் கொண்டாடப்பட்டன என்றும் அமைச்சர் தெரிவித்தார். நாட்டில் அமைதியைப் பராமரிப்பதில் துணைராணுவப் படையினரின் தியாகங்களை அமைச்சர் பாராட்டினார்.

----


(வெளியீட்டு அடையாள எண்: 1587408) வருகையாளர் எண்ணிக்கை : 220
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी