உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம்

சர்பாத்-த-பாலா எக்ஸ்பிரஸ் ரயிலின், லோஹியான் காஸ் வரை நீட்டிக்கப்பட்டுள்ள சேவை, மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், டாக்டர் ஹர்ஷ்வர்தன் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்

இடுகை இடப்பட்ட நாள்: 04 OCT 2019 2:41PM by PIB Chennai

குருநானக் தேவ் அவர்களின் 550-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சர்பாத்-த-பாலா எக்ஸ்பிரஸ் ரயிலின், லோஹியான் காஸ் வரை நீட்டிக்கப்பட்டுள்ள சேவையை மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ் கோயல், டாக்டர் ஹர்ஷ்வர்தன் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல் ஆகியோர் இன்று (04.10.2019) புதுதில்லி ரயில் நிலையத்தில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். குருநானக் ஞானம் பெற்ற சுல்தான்பூர் லோடி ரயில் நிலையம், நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படுகிறது.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரயில்வே மற்றும் வர்த்தக தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், இந்தப் புதிய ரயில் சுல்தான்பூர் லோடிக்குச் செல்லும் சீக்கிய யாத்ரீகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றார்.

நிகழ்ச்சியில் பேசிய உணவுப் பதனீட்டுத் தொழில்துறை அமைச்சர் திருமதி ஹர்சிம்ரத் கவுர் பாதல், இந்த ரயிலுக்கு, அனைவருக்கும் நன்மை என்ற பொருள்படும் ‘சர்பத்-த-பாலா’ எனப் பெயரிடப்பட்டிருப்பது பொருத்தமுடையது என்று கூறினார். 70 ஆண்டுகளுக்கு பிறகு சீக்கிய யாத்ரீகர்களின் விருப்பம் நிறைவேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் பேசிய சுகாதாரம் குடும்பநலத்துறை, அறிவியல், தொழில்நுட்பம், புவி அறிவியல் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன்,  சுல்தான்பூர் லோடிக்கு பயணம் மேற்கொள்ளும் யாத்ரீகர்களுக்கு நல்ல பயண வசதிகளை செய்து கொடுத்துள்ள ரயில்வே துறையைப் பாராட்டினார்.  

இந்த ரயில், திங்கள் மற்றும் சனிக்கிழமைகள் தவிர, வாரம் ஐந்து முறை, குளிர்சாதனப் பெட்டிகள் இணைக்கப்பட்டு, புதுதில்லிக்கும் சுல்தான்பூர் லோடிக்கும் இடையே இயக்கப்படும்.

 


(வெளியீட்டு அடையாள எண்: 1587250) வருகையாளர் எண்ணிக்கை : 177
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी