இடுகை இடப்பட்ட நாள்:
02 OCT 2019 11:00AM by PIB Chennai
மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்த நாளையொட்டி அவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்த காந்தியடிகள் மேற்கொண்ட உறுதிப்பாடு, தற்போதும் தேவைப்படுவதாக பிரதமர் கூறியுள்ளார். பரம ஏழைக்கும் அதிகாரம் அளிக்கும் உலகைக் காண அவர் விரும்பினார். அவரது சிந்தனைகள் இன்றும் நமக்கு வழிகாட்டி விளக்காக திகழ்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லால் பகதூர் சாஸ்திரியை நினைவுகூர்ந்துள்ள பிரதமர், அவரது மதிப்புமிக்க பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார். எந்த இடையூறு வந்தாலும், தமது கருத்துக்கள் மற்றும் கொள்கையிலிருந்து ஒருபோதும் மாறாத தளகர்த்தர் அவர் என்றும் கூறியுள்ளார்.
|
ராஜ்காட்டில் பாபுஜிக்கு மரியாதை செலுத்தினேன்.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை ஏற்படுத்த காந்தியடிகள் மேற்கொண்ட உறுதிப்பாடு, தற்போதும் தேவைப்படுகிறது.பரம ஏழைக்கும் அதிகாரம் அளிக்கும் உலகைக் காண அவர் விரும்பினார்.
அவரது சிந்தனைகள் இன்றும் நமக்கு வழிகாட்டி விளக்காக திகழ்கின்றன.
நரேந்திர மோடி (@நரேந்திரமோடி) அக்டோபர் 2, 2019
|
|
விஜய்காட்டில் சாஸ்திரிக்கு மரியாதை செலுத்தினேன்.
சாஸ்திரியின் மதிப்புமிக்க பங்களிப்பு என்றும் நினைவுகூரத்தக்கது.. எந்த இடையூறு வந்தாலும், தமது கருத்துக்கள் மற்றும் கொள்கையிலிருந்து ஒருபோதும் மாறாத தளகர்த்தர் அவர்.
நரேந்திர மோடி (@நரேந்திரமோடி) அக்டோபர் 2, 2019
|