பாதுகாப்பு அமைச்சகம்
பெரும்பாலும் உள்நாட்டு சாதனங்களால் உருவாக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
30 SEP 2019 3:26PM by PIB Chennai
பெரும்பாலும் உள்நாட்டு சாதனங்களால் உருவாக்கப்பட்ட பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை இன்று ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை அதன் முழு தொலை இலக்கான 290 கிலோமீட்டரை எட்டியது. இதற்கான சோதனையைப் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் பிரமோஸ் ஏரோஸ்பேஸும் இணைந்து நடத்தின. இது ‘இந்தியாவில் உற்பத்தி’ திட்டத்திற்கு ஊக்கமளிப்பதாகும்.
வெற்றிகரமான இந்த சோதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, பிரமோஸ் மற்றும் தொழில் துறையினரை பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
****************
(வெளியீட்டு அடையாள எண்: 1586715)
வருகையாளர் எண்ணிக்கை : 265