வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

பெய்ஜிங்கில் நடைபெற்ற பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் அமைச்சர்கள் அளவிலான 8-ஆவது கூட்டத்தில் இந்தியா பங்கேற்பு

प्रविष्टि तिथि: 03 AUG 2019 4:04PM by PIB Chennai

பெய்ஜிங்கில் 02-03 ஆகஸ்ட் 2019–ல் நடைபெற்ற, பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் (RCEP) அமைச்சர்கள் அளவிலான 8-ஆவது கூட்டத்தில்,  இந்தியாவின் சார்பில் மத்திய வர்த்தகத் துறை செயலாளர் டாக்டர் அனூப் வாத்வான் கலந்து கொண்டார்.  இந்தக் கூட்டத்தில் பேசிய அவர், பிராந்திய அளவிலான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பின் பேச்சுவார்த்தைகளை ஒழுங்குப்படுத்துவதில் இந்தியா இதுவரை ஆற்றிய பங்களிப்பை சுட்டிக்காட்டினார்.  பேச்சுவார்த்தைகளின் போது, சமச்சீரான முடிவுகளை மேற்கொள்ள ஏதுவாக, புரிந்துணர்வு, ஏற்றுக்கொள்ளுதல் மற்றும் விட்டுக்கொடுத்தல் போக்கை கையாள வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.  சில நட்புநாடுகளுடன் கூட நிலையற்ற வர்த்தகத்திற்கு வழிவகுக்கும் சந்தை அணுகுமுறை உள்ளிட்ட பிரச்சினைகளில் இந்தியாவின் கவலையையும், அவர் இந்தக் கூட்டத்தின் போது  முக்கியமாக எடுத்துரைத்துள்ளார்.

 

இந்தக் கூட்டத்தின் இடையே, சீனா, தாய்லாந்து, தென்கொரியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஜப்பான் நாடுகளின் வர்த்தகத் துறை செயலாளர்கள் மற்றும் ஆசியான் நாடுகளின் பொருளாதார அமைச்சர்களையும், வர்த்தகத் துறை செயலாளர் சந்தித்து இருதரப்பு ஒத்துழைப்புகள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார்.

 

சீன வர்த்தகத் துறை துணை அமைச்சர் திரு வாங் சோவென்னுடனான சந்திப்பின்போது, தற்போதைய வர்த்தகத்தில் நிலவும் சமச்சீரற்ற தன்மைக்கு சரியான தீர்வுகாண, RCEP ஒப்பந்தத்தை பின்பற்ற வேண்டியதன் அவசியம் குறித்து அவர் வலியுறுத்தியுள்ளார்.  இதேபோன்று, பிறநாடுகளின் அமைச்சர்கள் மற்றும் வர்த்தகத் துறை செயலாளர்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது, இந்தியப் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு சிறப்பான சந்தை அணுகுமுறை வாய்ப்புகளை உருவாக்கித் தருவது உள்ளிட்ட  அம்சங்களை டாக்டர் அனூப் வாத்வான் வலியுறுத்தியுள்ளார்.

 

***********

 

 


(रिलीज़ आईडी: 1581236) आगंतुक पटल : 229
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी