உள்துறை அமைச்சகம்

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்த மசோதா 2019 நாடாளுமன்றத்தில் நிறைவேறியது

Posted On: 02 AUG 2019 3:20PM by PIB Chennai

சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) திருத்த மசோதா 2019 மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றியது. மசோதா மீதான விவாதத்திற்குப் பதில் அளித்த மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா, மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்படவேண்டும் என்று அவையைக் கேட்டுக்கொண்டார். அவ்வாறு செய்வது, பயங்கரவாதிகள் மனித இனத்தின் எதிரிகள் என்பதோடு, தனது மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை முழுவதுமாக ஒழிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என்ற தகவலை உலகிற்கு கொண்டு செல்லும் என்றார்.

 

“நாம் எப்போதும் பயங்கரவாதத்திற்கு எதிரான வலுவான சட்டத்திற்கு ஆதரவு தந்துள்ளோம். கடந்த காலத்திலும், இந்தத் திசையை நோக்கிய எந்தத் திருத்தத்தையும் நிறைவேற்ற உறுதிகொண்டுள்ளோம். இந்தியாவிலிருந்து பயங்கரவாதத்தை வேரறுக்க கடுமையான சட்டம் தேவைப்படுகிறது. நாங்கள் எப்போதும் அதை ஆதரிப்போம்” என்றார்.

 

மேலும் பேசிய திரு அமித் ஷா, பயங்கரவாத செயல்களானவை, அமைப்புகளால் அல்ல, தனிநபர்களால் மேற்கொள்ளப்படுகின்றன என்றார். ஒரு அமைப்பை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதால் அதற்கு பின்னால் இருக்கும் தனிநபர்களை தடுக்க முடியாது. தனிநபர்களை பயங்கரவாதிகளாக அறிவிக்காமல் இருப்பது சட்டத்தை மீறுவதற்கு அவர்களுக்கு வாய்ப்பாக இருக்கும். அவர்கள் எளிமையாக மற்றொரு பெயரின் கீழ் ஒன்று கூடி, தங்களது பயங்கரவாத நடவடிக்கைகளைத் தொடர்வார்கள்.

 

இந்தச் சட்டத்திருத்தம் பயங்கரவாதத்திலிருந்து கிடைத்த நிதியைக்கொண்டு வாங்கப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான தேசிய புலனாய்வு முகமையின் தலைமை இயக்குநருக்கு அதிகாரம் வழங்குகிறது.

 

தேசிய புலனாய்வு முகமையின் திறமையைப் பாராட்டிய அமைச்சர், அம் முகமையின் தண்டனை விகிதமான 91 சதவீதம் உலக தரத்தின் அடிப்படையில் சிறந்ததாக உள்ளது என்றார்.

 

***


(Release ID: 1581177) Visitor Counter : 233