பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
எத்தனால் கலந்த பெட்ரோல்
प्रविष्टि तिथि:
08 JUL 2019 4:09PM by PIB Chennai
எண்ணெய் விற்பனை நிலையங்கள் மூலமாக எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்யும் திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தற்போதைய நிலையில், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிலையங்கள், 10% எத்தனால் கலந்த பெட்ரோலை விற்பனை செய்து வருகின்றன. மத்திய அரசு 08.06.2019 அன்று வெளியிட்ட உயிரி எரிபொருள் 2018 தொடர்பான தேசிய கொள்கையின்படி, 2030ஆம் ஆண்டு வாக்கில் 20% எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சாலைகள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குபடுத்துதல்) சட்டம் 1951-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு பிறகு, திருத்தப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து மாநிலங்கள் / யூனியன் பிரதேச அரசுகளுடன் மத்திய அரசு, அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறது. இதுவரை, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், கோவா, மகாராஷ்டிரா, குஜராத், பஞ்சாப், இமாசலப்பிரதேசம், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், ஹரியானா மற்றும் பீகார் ஆகிய 12 மாநிலங்கள், இந்தத் திருத்தப்பட்ட விதிமுறைகளை நடைமுறைப்படுத்தி உள்ளன.
மக்களவையில், கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
-----
(रिलीज़ आईडी: 1577815)
आगंतुक पटल : 364