பாதுகாப்பு அமைச்சகம்

ஓ.ஆர்.ஓ.பி. திட்ட புதுப்பித்தல்

Posted On: 08 JUL 2019 4:27PM by PIB Chennai

ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஓய்வூதியத்தை திருத்தியமைப்பதற்கான நெறிமுறைகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய, ராணுவ கணக்குகள் தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி தலைமையில் 14.06.2019 அன்று குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் விவரம் வருமாறு:-

 

  1. ராணுவ கணக்குகள் தலைமைக் கட்டுப்பாட்டு அதிகாரி     : தலைவர்
  2. இணைச் செயலாளர் (ESW)                                : உறுப்பினர்    
  3. கூடுதல் நிதி ஆலோசகர், பாதுகாப்பு (நிதி)            : உறுப்பினர்    
  4. முப்படைகளின் பிரதிநதி                                 : உறுப்பினர்    
  5. ராணுவ கணக்குகள் கூடுதல் தலைமைக் கட்டுப்பாட்டு  : உறுப்பினர்  

அதிகாரி                                    

  1. பிசிடிஏ (பணியாளர்), அலகாபாத்                     : உறுப்பினர்    
  2. ராணுவ கணக்குகள் இணை தலைமைக் கட்டுப்பாட்டு

அதிகாரி                                                : உறுப்பினர் &  

                                                       அமைப்பாளர்    

 

 

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் டாக்டர் டி. சுப்பராமி ரெட்டி மற்றும் திருமதி அம்பிகா சோனி ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு இன்று எழுத்து மூலம் அளித்த பதிலில் பாதுகாப்புத் துறை இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.

-----


(Release ID: 1577814)
Read this release in: English , Urdu , Punjabi