நிதி அமைச்சகம்

வாழ்வதை எளிதாக்க உதவும் தொழில்நுட்பங்களை கொண்டுவர அரசு முடிவு

Posted On: 05 JUL 2019 1:35PM by PIB Chennai

அரசு தனது குடிமக்கள் தங்கள் வாழ்க்கையை எளிதாக வாழ்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அரசு நிறுவனங்கள் உட்பட அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பணப் பரிமாற்றம் ஒப்புக் கொள்ளப்படுகிறது.  இந்த தொழில்நுட்பம் வாழ்க்கை முறையை எளிதாக்குகிறது என்று நாடாளுமன்றத்தில் இன்று 2019-20 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்த மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பிரதமரின் ஸ்ரம் யோகி ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் 30 லட்சம் தொழிலாளர்கள் சேர்ந்துள்ளனர் என்று நிதியமைச்சர் கூறினார். இதன்மூலம் அமைப்புசாரா தொழில் துறையில் பணி புரியும் தொழிலாளர்கள் 60 வயது ஆனவர்களுக்கு மாதத்திற்கு  ரூ.3,000 ஓய்வூதியம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.  உஜாலா திட்டத்தின்கீழ், ஆண்டொன்றுக்கு ரூ.18,341 சேமிக்கும் வகையில், ஏறத்தாழ 35 கோடி எல் ஈ டி விளக்குகள் வழங்கப்பட்டன.  நாட்டில் சூரிய எரிசக்தியை பயன்படுத்தும் அடுப்புகள் மற்றும் பேட்டரி சார்ஜர்கள் பயன்பாட்டை அதிகரிக்க எல்.ஈ.டி விளக்குகள் திட்டம் மேற்கொள்ள எடுக்கப்பட்ட நடவடிக்கை போன்று மேற்கொள்ளப்படும்.

ரயில் பயணத்தை சிறப்பான அனுபவமாக மாற்ற ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் பெரும் திட்டத்தை அரசு அறிமுகம் செய்யவுள்ளது என்றும் நிதியமைச்சர் தெரிவித்தார்.

**********


(Release ID: 1577560) Visitor Counter : 227