நிதி அமைச்சகம்

உலகத்தரமான கல்வி நிறுவனங்கள் அமைக்க ரூ. 400 கோடி ஒதுக்கீடு

प्रविष्टि तिथि: 05 JUL 2019 1:31PM by PIB Chennai

நிதியாண்டு 2019-20-ல் உலகத்தரமான கல்வி நிறுவனங்களை அமைக்க ரூ. 400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் இன்று தெரிவித்தார். இது கடந்த ஆண்டு கல்வித் துறைக்காக ஒதுக்கப்பட்ட தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாகும். மக்களவையில் 2019-20 ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையைத்  தாக்கல் செய்து பேசிய அமைச்சர் உலகளவில் சிறந்த கல்வி முறைகளில் ஒன்றாக இந்தியாவின் உயர் கல்வி முறை அமையும் வகையில் புதிய தேசிய கல்வி கொள்கையை அரசு அமைக்கும் என்று உறுதி அளித்தார். புதிய பள்ளி மற்றும் உயர் கல்வியில் மாற்றம் கொண்டு வருவதால், அரசின் ஆளுமைத்திறன் மேம்பட்டு, ஆய்வு மற்றும் புதிய கண்டுபிடிப்புகளில் கவனம் அதிகரிக்கும்.

ஆய்வு மற்றும் கண்டுபிடிப்புகளை குறிக்கோளாகக் கொண்டு, நாட்டில் ஆய்வுக்கான நிதி, ஒத்துழைப்பு மற்றும் ஊக்குவிப்புக்காக நிதி அமைச்சர் தேசிய ஆய்வு நிறுவனம் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.

நமது உயர் கல்வி நிறுவங்களில் வெளிநாட்டு மாணவர்கள் பயில ‘இந்தியாவில் கல்வி கற்போம்’ (ஸ்டெடி இன் இந்தியா) என்ற  திட்டத்தை அமைச்சர் அறிவித்தார். இந்திய உயர் கல்வி ஆணையத்தை அமைப்பதற்கான சட்ட முன்வரைவு வரும் ஆண்டு சமர்பிக்கப்படும் என்றும் கூறினார்.

தேவையான அனைத்து நிதி உதவிகளையும் அளிக்கும் வகையில் விளையாடு இந்தியா திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என்றும், இத்திட்டத்தின் கீழ் எல்லா அளவிலும் விளையாட்டுகளை பிரபலப்படுத்த விளையாட்டு வீர்களின் மேம்பாட்டிற்கான தேசிய விளையாட்டு கல்வி வாரியம் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.  

உலகின் சிறந்த 200 பல்கலைக்கழக பட்டியலில், இரண்டு இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனமும் இடம்பிடித்துள்ள என்று அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

*****


(रिलीज़ आईडी: 1577527) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Bengali , Malayalam