நிதி அமைச்சகம்
கடந்த ஐந்து ஆண்டுகளில் சமூக சேவைகள் துறையில், ஜி.டி.பி.ன் அளவில் ஒரு சதவீதப் புள்ளிக்கும் அதிகமாக செலவு அதிகரித்துள்ளது : பொருளாதார ஆய்வறிக்கை
இடுகை இடப்பட்ட நாள்:
04 JUL 2019 12:16PM by PIB Chennai
சமூகக் கட்டமைப்பு விஷயங்களில் முதலீடு செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை 2018-19 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்தியுள்ளது. பங்கேற்புடன் கூடிய வளர்ச்சியை எட்டுவதற்கான வளர்ச்சி செயல் திட்டத்துக்கு உயர் முன்னுரிமை அளிக்கும் வகையில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் முதலீடு அதிகரிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப் பட்டுள்ளது. ``வறுமையை ஒழிப்பதும், மற்ற குறைபாடுகளைக் களைவதும் சுகாதாரம் மற்றும் கல்வியை மேம்படுத்துவது, சமத்துவமின்மையைக் குறைப்பது, நீடித்த முறையில் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துதல் அளிப்பது என்ற வகைகளில் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்படுவதாக இருக்க வேண்டும்'' என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது. நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030 என்ற இலக்கை எட்டுவதில் தன்னுடைய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்கு இந்தியா தீவிரமாகப் பணியாற்றி வருகிறது. 2018-19 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி மற்றும் பெரு நிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார்.
சமூக சேவைகளில் செலவினங்களின் போக்கு:
சமூக சேவைகளில் மத்திய அரசும், மாநில அரசுகளும் செய்த செலவின் தொகை 2014-15ல் ரூ. 7.68 லட்சம் கோடி என்ற நிலையில் இருந்து 2018-19ல் ரூ.13.94 லட்சம் கோடியாக யர்ந்துள்ளது.
மகளிருக்கு அதிகாரமளித்தல்:
பெண்களின் நலனுக்காகவும், சமூக மாற்றத்தில் பெண்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என்பதற்காகவும் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம், உஜ்வாலா, போஷன் அபியான் போன்ற பல திட்டங்களை அரசு தொடங்கியுள்ளது.
சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள்:
நாட்டு மக்களுக்கு சமூகப் பாதுகாப்பு அளிப்பதற்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு மேற்கொண்ட பல்வேறு சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை பொருளாதார ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கல்வி:
ஆரம்பக் கல்வி அளிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சிகள் காரணமாக சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளிலும், அனைத்துப் பாலினத்தவர் மத்தியிலும் நல்ல பலன்கள் கிடைத்துள்ளன என்று மேலோட்டமான கல்வி புள்ளி விவரங்கள் (ESAG) அறிக்கையில் தெரிய வந்திருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சுகாதாரம்:
பேறுகால மரணங்களின் விகிதாசாரம் 37 புள்ளிகள் குறைந்திருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. 2011-13 காலகட்டத்தில் ஒருலட்சம் பிரசவங்களில் 167 பேர் உயிரிழந்த நிலையில், 2014-16 காலகட்டத்தில் அது ஒரு லட்சத்துக்கு 130 என்று குறைந்துள்ளது. 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளின் மரணம் 2008-16 காலகட்டத்தில் பெருமளவு குறைந்துள்ளது. ஆண்டுக்கு 6.7 சதவீதம் குறைந்துள்ளது.
தொழில் திறன் அளித்தல் மற்றும் வேலைவாய்ப்பு:
தொழில் செய்யும் நிலையில் உள்ளவர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் தொழில் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் குறித்த தேசியக் கொள்கையின் மூலமாகவும், பிரதமரின் கவ்சல் விகாஸ் திட்டம், பிரதமரின் கவ்சல் மையங்கள், தேசிய அப்ரன்டிஸ் மேம்பாட்டுத் திட்டம் போன்றவற்றின் மூலம் தொழில் திறன் பயிற்சி அளிக்க முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.
(வெளியீட்டு அடையாள எண்: 1577231)
வருகையாளர் எண்ணிக்கை : 194