நிதி அமைச்சகம்
தூய்மை இந்தியா திட்டம் துவங்கியது முதல் இந்தியா முழுவதும் 935 கோடிக்கும் மேல் கழிப்பறைகள் கட்டப்பட்டு, 5.5 லட்சத்திற்கும் மேற்பட்ட கிராமங்கள் திறந்த வெளி கழிப்பறை முறையற்ற கிராமங்களாக அறிவிக்கப்பட்டது.
प्रविष्टि तिथि:
04 JUL 2019 12:15PM by PIB Chennai
மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் 2018-19 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். அக்டோபர் 2, 2019க்குள் அனைவருக்கும் சுகாதாரம் என்ற இலக்கை கொண்டு 2014-ல் துவங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கத்தின் வளர்ச்சி குறித்து பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது. இந்த இயக்கத்தின் மூலம் கடந்த நான்கு ஆண்டுகளில், 99.2 சதவீத ஊரக இந்தியா பயன் அடைந்துள்ளது. அக்டோபர் 2014 முதல் நாடு முழுவதும் 9.5 கோடிக்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டப்பட்டு, 564,658 கிராமங்கள் திறந்த வெளி கழிப்பறையற்ற கிராமங்களாக அறிவிக்கப்பட்டன. ஜூன் 14, 2019-ல் 30 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் தனி வீடுகளில் கழிப்பிட வசதி 100 சதவீதத்தை எட்டியுள்ளது.
மேலும் தூய்மை பாரத இயக்கம், ஐந்து வயதிற்கு குறைவான குழந்தைகள், பச்சிளம் குழந்தை, குறைந்த எடையுடன் (2.5 கிலோவுக்கும் கீழ்) பிறந்த குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு மற்றும் மலேரியாவை குறைக்க உதவியுள்ளது.
அரசின் முயற்சியால், தற்போது தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், 98.9 சதவீத இந்திய மக்கள் பயன் அடைந்துள்ளனர். 2014 முதல் 2018 வரை, வீடுகளில் கழிப்பறை வசதி எண்ணிக்கை வெகுவாக வளர்ந்து. கடந்த சில ஆண்டுகளில், ஆண்டு ஒன்றுக்கு 50 லட்சம் வீடுகளில் கழிப்பறை வசதி அமைக்கப்பட்டது. தற்போது இந்த எண்ணிக்கை வருடத்திற்கு மூன்று கோடியை எட்டியுள்ளது.
“திட மற்றும் திரவ கழிவு மேலாண்மையும்” தூய்மை பாரத இயக்கத்தின் முக்கிய அங்கமாகும் என்று பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகமும், யூனிசெஃப்பும் இணைந்து நடத்திய ஆய்வில், நீர், நிலம் மற்றும் உணவில் ஏற்படும் தூய்மைக் கேடு தூய்மை பாரத இயக்கம் ஏற்படுத்திய தாக்கத்தால் கணிசமாகக் குறைந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது.
“தூய்மை பாரத இயக்கம் சிறந்த மாற்றங்களை கொண்டுவந்து, சமூகத்திற்கும் பலன் அளித்துள்ளது” என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறியுள்ளது.
******
(रिलीज़ आईडी: 1577221)
आगंतुक पटल : 249