நிதி அமைச்சகம்

நுகர்வோர் விலை குறியீட்டு எண்-ஒருங்கிணைப்பை (CPI-C) அடிப்படையாகக் கொண்ட பணவீக்கம் 2018-19ல் 3.4 விழுக்காடாக குறைந்தது; ஐந்தாவது நேரடி நிதியாண்டிலும் தொடரும் வீழ்ச்சி; கடந்த இரண்டாண்டுகளில் 4.0 விழுக்காடுக்கும் குறைவு

Posted On: 04 JUL 2019 12:16PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன், 2018-19ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நாட்டின் பொருளாதாரம், உயர்ந்த மற்றும் ஏற்றத்தாழ்வுடன் கூடிய பணவீக்கத்திலிருந்து நிலையான மற்றும் குறைந்த அளவிலான பணவீக்கத்திற்கு கடந்த ஐந்தாண்டுகளில் படிப்படியாக மாறியிருக்கும் சூழலை நாட்டின் பொருளாதாரம் சந்தித்திருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

நுகர்வோர் விலை குறியீட்டு எண்-ஒருங்கிணைப்பு (CPI-C) பணவீக்கம் கடந்த ஐந்தாண்டுகளில் தொடர்ந்து சரிவடைந்து வருவதாக ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நுகர்வோர் விலை குறியீட்டு எண்-ஒருங்கிணைப்பு (CPI) பணவீக்கம் 2017-18ல் இருந்த 3.6 விழுக்காட்டிலிருந்து 3.4 விழுக்காடாகக் குறைந்தது.

இந்தப் பணவீக்க விகிதம் 2016-17ல் 4.5 விழுக்காடாகவும், 2015-16ல் 4.9 விழுக்காடாகவும் மற்றும் 2014-15ல் 5.9 விழுக்காடாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. ஏப்ரல் 2018-ல் இருந்த 4.6 விழுக்காடு பணவீக்கத்தை ஒப்பிடும்போது, ஏப்ரல் 2019-ல் பணவீக்கம் 2.9 விழுக்காடாக குறைந்துள்ளது.  நுகர்வோர் உணவு விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்ட உணவு பணவீக்கம் 2018-19ஆம் நிதியாண்டில் குறைந்தபட்சமாக 0.1 விழுக்காடாக குறைந்திருப்பதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*******


(Release ID: 1577220)
Read this release in: Malayalam , English , Bengali