பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு

விவசாயிகளின் நலன் நாடும் மத்திய அரசு

2019-20 பருவத்தின் அனைத்துக் குறுவை சாகுபடி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 03 JUL 2019 4:36PM by PIB Chennai

விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் முக்கிய நடவடிக்கையாக  2019-20 பருவத்தின் அனைத்துக் குறுவை சாகுபடி பயிர்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலையை உயர்த்த பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

     விவசாயிகளுக்குக்  கட்டுப்படியாகும் விலையை உறுதி  செய்வது,  முதலீடு மற்றும் உற்பத்தியை அதிகரிக்க வழி வகுக்கும்.

     நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.65-ம், சோளத்திற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.120-ம், கேழ்வரகுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.253-ம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இதையடுத்து மோட்டா ரக நெல்லின் விலை, குவிண்டாலுக்கு ரூ.1,815 ஆகவும்,  சன்ன ரக  நெல்லின் விலை குவிண்டாலுக்கு ரூ.1835 ஆகவும் இருக்கும்.

வீரிய சோளம் விலை குவிண்டாலுக்கு ரூ.2550-ஆகவும், மால்தண்டி சோளத்தின் விலை குவிண்டாலுக்கு ரூ.2570-ஆகவும் இருக்கும். 

ராகியின் விலை குவிண்டாலுக்கு ரூ.3,150 ஆக உயரும். 

     துவரம் பருப்பின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.125 உயர்த்தப்பட்டு ஒரு குவிண்டாலின் விலை ரூ.5,800 ஆக இருக்கும். 

     பாசிப்பயறின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.75 உயர்த்தப்பட்டு  ஒரு குவிண்டாலின் விலை ரூ.7,050 ஆக  இருக்கும்.

     உளுந்தின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 அதிகரிக்கப்பட்டிருப்பதால் ஒரு குவிண்டாலின் விலை ரூ.5,700 ஆக உயரும்.

     நிலக்கடலையின் குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.200 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் அதன் விலை குவிண்டாலுக்கு ரூ. 5,090 ஆக இருக்கும்.

     நடுத்தர இழை பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.105 அதிகரிக்கப்பட்டிருப்பதால் இந்தப் பருவத்தில் அதன் விலை குவிண்டாலுக்கு ரூ.5,255 ஆக உயரும். நீண்ட இழை பருத்திக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.100 உயர்த்தப்பட்டிருப்பதால் இதன் விலை ரூ.5,550 ஆக இருக்கும்.

                                                ------------



(Release ID: 1576901) Visitor Counter : 245