நிதி அமைச்சகம்

சரக்கு & சேவை வரியின் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா 01 ஜூலை 2019 அன்று கொண்டாடப்படவுள்ளது

Posted On: 30 JUN 2019 1:04PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரி(GST) அமலுக்கு வந்ததன் இரண்டாம் ஆண்டு நிறைவு விழா, நாளை கொண்டாடப்படுகிறது.  மத்திய நிதி மற்றும் கம்பெனி விவகாரங்கள் துறை இணையமைச்சர் திரு அனுராக் தாகூர் இந்த விழாவிற்கு தலைமையேற்கவுள்ளார்.

      பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் திரு சுபாஷ் சி கார்க், வருவாய்த் துறை செயலாளர் டாக்டர் அஜய் பூஷன் பாண்டே, நிதியமைச்சகத்தின் செயலாளர்கள் மத்திய மறைமுக வரிகள் வாரியத்தின் தலைவர் திரு பி கே தாஸ்,மற்றும் உறுப்பினர்களும்,  மற்றும் மத்திய அரசின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த உயரதிகாரிகளும் இந்த விழாவில் பங்கேற்கவுள்ளனர்.  பல்வேறு தொழில் வணிக சங்கங்களின் நிர்வாகிகளும் பெருமளவில் பங்கேற்கவுள்ளனர். இதேபோன்ற விழாக்கள், நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொண்டாடப்பட உள்ளது.

நாளை நடைபெறும் விழாவின் போது, குறு, சிறு, நடுத்தரத் தொழில்களுக்கான ஜிஎஸ்டி என்ற நூலும் வெளியிடப்பட உள்ளது. 

      நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்க வகை செய்யும் ஜிஎஸ்டி, 30 ஜூன் 2017 நள்ளிரவில் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில் தொடங்கி வைக்கப்பட்டு,  01, ஜூலை 2017 முதல் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது. 

      கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in இணையதளத்தைக் காணவும்.

*****



(Release ID: 1576370) Visitor Counter : 140


Read this release in: English , Urdu , Hindi