பிரதமர் அலுவலகம்

காந்தி அமைதி விருது வழங்கும் விழாவில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 26 FEB 2019 3:00PM by PIB Chennai

2015, 2016, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுக்கான  காந்தி அமைதி விருது குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கினார்.  இந்நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார்.

      இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர்,   காந்தி அமைதி விருதை பெற்ற அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். இந்தியா, மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளைக் கொண்டாடும் இவ்வேளையில், இந்த விருது வழங்கப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார். இத்தருணத்தில்  மகாத்மா காந்தி விரும்பிய  வைஷ்ணவ ஜன தோ  பாடலை உலகெங்கும் 150 நாடுகளில் கலைஞர்கள் பாடியது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் தெரிவித்தார். இன்றும் காந்தியின் போதனைகளை உலகம் முழுவதும் ஏற்றுக்கொள்கிறது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும் என்று அவர் கூறினார்.

      தூய்மைக்கான மகாத்மா காந்தியின் அர்ப்பணிப்பு குறித்தும் பிரதமர் குறிப்பிட்டார்.

      மகாத்மா காந்தியின் தொலைநோக்கு முயற்சிகளால்  சுதந்திரப் போராட்டம் மிகப் பெரிய இயக்கமாக மாறியது என்று பிரதமர் தெரிவித்தார். ஜன் பஹீதாரியையும் (பொதுமக்கள் பங்களிப்பு) ஜன் அந்தோலனையும் (பெரும் இயக்கம்) மகாத்மா காந்தி  ஒருங்கிணைத்தார் என்று பிரதமர் கூறினார்.

      இந்தியாவின் சுதந்திரத்திற்காக ஒவ்வொருவரும் பங்களிக்கிறார்கள் என்ற எண்ணத்தை மகாத்மா காந்தி உருவாக்கினார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

-------


(Release ID: 1574907) Visitor Counter : 152