பிரதமர் அலுவலகம்

உத்தரப்பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் பிரதமரின் உரை

Posted On: 08 MAR 2019 12:00PM by PIB Chennai

பாபா விஸ்வநாதர், மாதா அன்னபூரணி மற்றும் கங்கை அன்னையைப் போற்றுவோம்! ஹர ஹர மகாதேவ்!

 

காசி விஸ்வநாதர் கோவிலின் நீண்ட கால கனவு நிறைவேறியுள்ளதை காண நான் அதிர்ஷ்டம் செய்துள்ளேன். நான் அரசியலில் இல்லாத சமயத்தில், நான் இந்த இடத்திற்கு பலமுறை பயணம் மேற்கொண்டுள்ளேன். அதே சமயம், நான் இந்த இடத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்ததுண்டு. ‘மகனே, நீ நிறையப் பேசுகிறாய். தற்போது, நீ உனது வார்த்தைகளை செயலாக மாற்றுஎன்று போலே பாபா எனது விதியை முடிவு செய்துள்ளார் என்று நினைக்கிறேன். இந்த கனவு நிஜமானது, போலே பாபாவின் ஆசீர்வாதமாக நீங்கள் கருதலாம். காசி விஸ்வநாதர் கோவிலின் மறுசீரமைப்பின் மூலம், போலே பாபா சிறப்பிக்கப்பட்டுள்ளார். நமது கடவுள் நான்கு சுவர்களுக்கிடையே அடைக்கப்பட்டிருந்தார். எத்தனை காலமாக அவர் அடைக்கப்பட்டு சுவாசிக்கக்கூட இடமின்றி அவதிப்பட்டார் என்று எனக்கு தெரியவில்லை. தற்போது, முதல் முறையாக அருகில் இருந்த அனைத்து கட்டிடங்களும் கையகப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது போலே பாபா மட்டுமின்றி அவரின் பக்தர்களும் சுதந்திரமடைந்து சிறந்த அனுபவத்தை பெறுவார்கள்.

      நான் ஏராளமான ஆண்டுகள் முதலமைச்சராக இருந்து பல்வேறு அரசு அலுவலர்களை சந்தித்துள்ளேன். அரசு ஒரு பணியை கையிலெடுக்கும்போது, அலுவலர்கள் அந்தப் பணியை முடிக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்கின்றனர். ஆனால் இன்று  யோகி அவர்களின் அரசு அலுவலர்களைக் கொண்ட அணி, பகலும், இரவும் இந்த பணியை முழு அர்ப்பணிப்புடன் செய்து முடித்துள்ளது எனக்கு பெருமை அளிக்கிறது. இடங்களை கையகப்படுத்தும் பணி, அனைவருக்கும் அதனை புரிய வைப்பது, அனைவருடனும் இணைந்து பணி புரிவது, எதிரணியின் பொய்யான செய்திகள் பரவாமல் தடுப்பது, இந்த திட்டம் அரசியல் ஆதாயத்தில் சிக்கிக்கொள்ளாமல் பாதுகாப்பது ஆகியவை கடினமான பணியாக இருந்ததுஅலுவலர்களைக் கொண்ட இந்த அணி அனைத்து பணிகளையும் முடித்துள்ளது. இந்த சிறப்பான பணியை முடித்ததற்காக அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் நான் இன்று தெரிவித்துக்கொள்கிறேன்!

இந்தப் பகுதியில் உள்ளவர்களிடம் கடவுளின் பணிக்காக தங்களின் இடங்களை தருமாறு நாங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஏறத்தாழ 300 இடங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஒரு சில மக்களின் எதிர்ப்பை தவிர, மக்கள் அரசுடன் ஒத்துழைத்து, அரசின் மீது நம்பிக்கை வைத்து, தங்களின் மதிப்பற்ற இடங்களை கடவுளின் பாதத்திற்கு சமர்ப்பித்தது மிகப்பெரிய தியாகமாகும். இந்த மக்கள் சிறந்த தானத்தை செய்துள்ளனர். இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக நான் அவர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அரசின் பணியை தங்களின் பணியாக கருதி, இந்தக் கனவினை நிஜமாக்க அவர்கள் அளித்த ஒத்துழைப்புக்கு நான் அவர்களுக்கு எனது வாழத்துக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்

பல நூற்றாண்டுகளாக எதிரிகளின் இலக்காக இந்த இடம் இருந்துள்ளது. பலமுறை இந்த இடம் இடிக்கப்பட்டு, தரைமட்டமாக்கப்பட்டது. ஆனால், மக்களின் நம்பிக்கையும், பக்தியும் இந்த இடத்தை மறுசீரமைத்ததுடன், மறுபிறவியையும் அளித்துள்ளது. இது பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருகிறது. மகாத்மா இந்த இடத்திற்கு பயணம் மேற்கொண்டபோது, போலே பாபாவின்  மோசமான நிலையைக் கண்டு வருந்தினார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அவர் ஆற்றிய உரையின்போது தனது வருத்தத்தை அவர் வெளிப்படுத்தினார். இன்னும் சில நாட்களில், இந்த நிகழ்வு நடைபெற்று, 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.

 

250 ஆண்டுகளுக்கு பிறகு, அஹில்யா தேவி அதன் மறுகட்டமைப்புப் பணியினை தொடங்கிவைத்தார். அதன் பிறகு தான் இந்த இடம் சரியான வடிவம் பெற்றது. இதில் அஹில்யா தேவி முக்கிய பங்கு வகித்துள்ளார். ஏன், சோமனாத்திலும் அஹில்யா தேவி முக்கிய பங்கு வகித்துள்ளார். சிவன் மீதான பற்றினால், தனது மாநில நிர்வாக பணியுடன் இப்பணியிலும் ஈடுபட்டார். 250 ஆண்டுகள் ஆகிவிட்டன. இத்தனை ஆண்டுகளில் யாராவது போலே பாபாவை பற்றி நினைத்ததுண்டா? இல்லை! அனைவரும் சுய ஆர்வத்தை மட்டுமே நினைத்துள்ளோம். கட்டிடங்களை இடிக்கும்போதுதான் இந்த வீடுகளுக்கு இடையே 40 கோவில்கள் சிக்கிக்கிடப்பதை நாம் உணர்ந்தோம்! போலே பாபாதான் நமக்குள் இந்த எண்ணங்களை விதைத்து  கனவினை நினைவாக்க வழிவகுத்துள்ளார். போலே பாபா மட்டும் அல்ல, வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் கொண்ட 40-க்கும் மேலான கோவில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்புமிக்க தளங்களை, இந்தியா மற்றும் உலக நாடுகளில் இருந்து வரும் பார்வையாளர்கள் காணும்போது, இந்த சில மக்களின் பணியைக் கண்டு மெய்சிலிர்ப்பர்! கடந்த 70 ஆண்டுகளாக அரசு மவுனமாக இருந்தது. இந்த விஷயங்களை அவர்கள் ஒடுக்கி வைத்திருந்தனர். இருப்பினும், இன்று இந்த 40 கோவில்களும் வெளிக்கொண்டுவரப்படும். பல ஆண்டுகளுக்குப் பிறகு, இங்கு சிவராத்திரி மிக பிரமாண்ட முறையில் கொண்டாடப்பட்டதாக என்னிடம் கூறினர்.  அது ஒரு திறந்த மற்றும் பரவலான வளாகம், அங்கு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்தனர். ஆயிரக்கணக்கானோர் இங்கு ‘செல்பி’ புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர். உங்கள் சமூக வலைத்தளங்களை பாருங்கள். இந்த வளாகம் தொடர்பான லட்சக்கணக்கான புகைப்படங்களை உங்களால் காண முடியும். அது ஒரு கனவு.  நீங்கள் ஒரு எடுத்துக்காட்டையும், திரைப்படத்தையும் இங்கு பார்க்க முடியும். தற்போது அன்னை கங்கை நேரடியா சிவனுடன் இணைந்துள்ளார். நாம் இப்போது கங்கையில் குளித்த பின் நேரடியாக சிவனின் காலடியில் நம்மை சமர்ப்பிக்கலாம்.

போலே பாபாவாகிய காசி விஸ்வநாதர் இருக்கும் இந்த இடம் பல கோடி மக்களின் புண்ணியத்தலமாகும்.  மக்கள் காசிக்கு வருவதற்கான முக்கிய காரணம் காசி விஸ்வநாதர் மேல் வைத்திருக்கும் அதீத நம்பிக்கையும், மரியாதையும் ஆகும்.  அந்த நம்பிக்கை தற்போது மேலும் வலுப்படுத்தப்படும்.  நமது கோயில்களை பாதுகாக்கவும், அதன் பராமரிப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் ஒரு மாதிரி உருவாக்கப்படும்.  தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கலைப் பொருட்களை பாதுகாக்க, நவீன தொழில்நுட்பம் எவ்வாறு உதவும் என்பதை இந்த வளாகத்தின் கட்டுமானம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.  இந்த காசி விஸ்வநாதர் தாம், காசி விஸ்வநாதர் கோயிலில் வெளிவளாகமாக திகழ்ந்து, நம்மை கங்கைக்கு அழைத்துச் செல்லும்.  இந்த வளாகம் நம்மை கங்கை அன்னையிடம் கொண்டு சேர்க்கும்.  இந்த உலகத்தில் இது காசிக்கு ஒரு புதிய அடையாளத்தை அளிக்கும்.  250 ஆண்டிற்கு பிறகு, இப்பணியினை கடவுள் என் விதியில் எழுதியிருக்கலாம்.  அதனால், 2014 ஆம் ஆண்டு நாங்கள் தேர்வு செய்யப்பட்டபோது,   என்னுள்ளே ஒரு குரல் கூறியது-‘நான் இங்கு நானாக வரவில்லை, நான் அழைக்கப்பட்டிருக்கிறேன்!’ அந்த அழைப்பு இந்தப் பணியினை மேற்கொள்ளத்தான் என்பதை நான் இங்கு உணர்கிறேன்;  மேலும், இதுபோன்ற பணிகளை மேற்கொள்வதற்கான எனது உறுதிப்பாடு மேலும் வலுவடைந்துள்ளது. இதில் காசியில் உள்ள மக்களுக்கு மட்டுமல்ல, நம் நாட்டின் ஏனைய மக்களுடனும் இணைந்ததே. காசி விஸ்வநாதர் தாமின் மறுகட்டமைப்புக்கான யோசனை, அதன் செயல்பாடு, செயல்முறை, அதற்கான சொத்துக்கள் எவ்வாறு பெறப்பட்டன, மக்கள் எவ்வாறு ஒத்துழைத்தனர் என்பது போன்ற அனைத்தையும் குறித்தும் ஒரு ஆய்வு நடத்துமாறு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தை நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த தாமின் கட்டுமானப் பணி ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் ஆய்வும் நடந்து கொண்டிருக்கட்டும். இதன் மூலம் இந்தப் பணி முடிவடைந்த பின், நாம் எப்படிப்பட்ட வளாகத்தை எழுப்பியுள்ளோம், அதன் செயல்முறைகள் மற்றும் அதில் சம்பந்தப்பட்ட மக்கள் குறித்த விவரங்களை நாம் உலகிற்கு ஒரு அறிக்கையாக அளிக்க முடியும். இதுவொரு அற்புதமான ஆவணத்தை உருவாக்கும். நாங்கள் வேதத்தில் கூறியவாறே அனைத்தையும் பின்பற்றியுள்ளோம். இது தொடர்பாக எந்தவொரு சமரசத்தையும் நாங்கள் செய்யவில்லை. பக்தியில் எந்தவொரு எதிர்மறை விளைவுகளும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதற்காக நாங்கள் அனைத்துப் பணிகளையும் வேதத்தின்படியே செய்துள்ளோம்.

இன்று காசி விஸ்வநாதர் தாம் காசிக்கும், சமூகத்திற்கும் புதிய அடையாளமாய் மாறும். சமூக நம்பிக்கையின் மையமாக இது மாறும் போது, சமூக புரட்சிக்கான வாய்ப்பை இது உருவாக்கும். அப்படிப்பட்ட அற்புதமான பணி இன்று இங்கு நடக்கிறது. யோகி அவர்களின் அரசுக்கு நான் மீண்டும் வாழ்த்துத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல் 3 வருடங்களில், அப்பொழுது இருந்த மாநில அரசிடமிருந்து எந்தவித ஒத்துழைப்பும் கிடைக்கவில்லை, அதனால் என்னால் எதுவும் செய்ய இயலவில்லை. அதன் பின் நீங்கள் யோகி அவர்களின் அரசை தேர்வு செய்த பிறகு, காசியில் அனைத்துப் பணிகளுக்கும் ஊக்கமளிக்கப்பட்டு, எங்களால் அனைத்துப் பணிகளையும் நிறைவேற்றி முடிக்க முடிந்தது. காசி மக்களின் அனைத்து கனவுகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று நான் உறுதியாக உள்ளேன். அதே போல் கண்டெடுக்கப்பட்ட 40 கோயில்களின் பராமரிப்பை உறுதி செய்வேன். அதன் தோற்றத்தை நாம் மேலும் மெருகேற்ற வழிவகுப்போம்.  இந்த தொல்லியல் பொருட்கள் தோண்டியெடுக்கப்பட்ட பின், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஆய்வினை மேற்கொண்டு, அது எவ்வளவு பழமையானது, எத்தனை வருடங்கள், நூற்றாண்டுகளுக்கு முந்தையது என்பதையும், எப்போது கட்டப்பட்டது என்பதையும் கண்டறியும். அதன் பின் காசியின் எண்ணமும் இதன் முறைகளும் கையோடு கை சேர்த்துச் செல்லும். மீண்டும் தாய் மற்றும் தந்தையின் காலடியில் நான் பணிகிறேன். காசி மக்களின் ஆசீர்வாதத்தோடு இந்தப் புனிதப்பணி தொடங்க உள்ளது.

என்னோடு இணைந்து சொல்லுங்கள் –

ஹர ஹர மகா தேவ்!!

***



(Release ID: 1574840) Visitor Counter : 204


Read this release in: Assamese , English , Hindi