சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்

மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக நிதின் கட்கரி பொறுப்பேற்றார்

இடுகை இடப்பட்ட நாள்: 04 JUN 2019 12:21PM by PIB Chennai

புது தில்லியில், இன்று, திரு நிதின் கட்கரி மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறைக்கும் அமைச்சராக உள்ளார்.

 

முந்தைய கடந்த அரசில், அவர் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள், கப்பல் போக்குவரத்து, நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டுத்தல் துறைகளுக்கான அமைச்சராகப் பணியாற்றினார்.

மே, 2014 முதல் திரு. கட்கரி மக்களவை உறுப்பினராக உள்ளார். 1989 முதல் 2014 வரை அவர் மகாராஷ்டிராவின் சட்டமன்ற மேலவை உறுப்பினராக இருந்தார். 1995 முதல் 1999 வரை மகாராஷ்டிரா அரசில் பொதுப் பணித் துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

   


(வெளியீட்டு அடையாள எண்: 1573367) வருகையாளர் எண்ணிக்கை : 318
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी