நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம்
பொதுத் தேர்தல் 2019-க்குப் பின் நாடாளுமன்றத்தைக் கூட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
31 MAY 2019 8:39PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற முதலாவது மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் 17 ஆவது மக்களவையை ஜூன் 17, 2019 திங்கள் அன்று கூட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அரசுப் பணிகளுக்கு உட்பட்டு இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 26 2019 வெள்ளிக்கிழமை முடிவடையும்.
மாநிலங்களவை ஜூன் 20, 2019 வியாழக்கிழமை கூட்டப்படும். அரசுப் பணிகளுக்கு உட்பட்டு இந்தக் கூட்டத் தொடர் ஜூலை 26, 2019 வெள்ளிக்கிழமை முடிவடையும்.
மக்களவைத் தலைவர் தேர்தல் ஜூன் 19, 2019 புதன்கிழமை நடைபெறும்.
அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 87 (1)-ன் படி, ஜூன் 20, 2019 வியாழன் காலை 11 மணிக்கு நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இருஅவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுமாறு குடியரசுத் தலைவர் கேட்டுக் கொள்ளப்படுவார்.
மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை ஜூலை 4, 2019 வியாழன் அன்று சமர்ப்பிக்கப்படும்.
2019-20க்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை மக்களவையில் ஜூலை 5, 2019 வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு சமர்ப்பிக்கப்படும். நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட/அளிக்கப்பட்ட பின், இருஅவைகளும் நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்படும்.
*********************
(Release ID: 1573128)
Visitor Counter : 154