உள்துறை அமைச்சகம்

ஃபானி புயலை எதிர்கொள்ள மாநில பேரிடர் நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ. 309.375 கோடி

தமிழகம், ஆந்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவிற்கு ஃபானி புயலை எதிர்கொள்வதற்கான நிவாரண நிதி ஒதுக்கீடு

Posted On: 30 APR 2019 10:38AM by PIB Chennai

ஃபானி புயலை எதிர்கொள்வதற்காக தேசிய இடர் மேலாண்மைக் குழுவின் முடிவின்படி மத்திய உள்துறை அமைச்சகத்தின் தமிழகம் உட்பட நான்கு மாநிலங்களுக்கும் முன்கூட்டியே மொத்தம் ரூ. 1,086 கோடியை  நிவாரண நிதியாக வழங்க உத்தரவிட்டுள்ளது.  

தமிழகத்திற்கு ரூ. 309.375 கோடியும், ஆந்திரப்பிரதேசத்திற்கு ரூ.200.25 கோடியும், ஒடிசாவுக்கு ரூ.340.875 கோடியும், மேற்கு வங்காளத்திற்கு ரூ. 235.50 கோடியும் ஃபானி புயல் தொடர்பான தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளுக்கு உதவதற்காக  மாநில பேரிடர்  நிவாரண நிதியாக வழங்கப்படும்

*******


(Release ID: 1571322)