பிரதமர் அலுவலகம்

நாரிசக்தி விருது பெற்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்

Posted On: 09 MAR 2019 12:31PM by PIB Chennai

நாரிசக்தி விருது பெற்றவர்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.03.2019) சந்தித்து உரையாடினார்.

விருது வென்றவர்களின் சாதனைகளுக்காகப் பிரதமர் அவர்களைப் பாராட்டினார். அவர்களின் பணி மற்றவர்களுக்கு ஊக்கமளிப்பதாக இருக்கின்றன என்று குறிப்பிட்ட பிரதமர், அவர்கள் சார்ந்த துறைகளில் மேலும் சாதனைகள் புரியுமாறு அறிவுறுத்தினார்.

      தூய்மை இந்தியா திட்டம் பற்றி குறிப்பிட்ட அவர், அதன் வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் பெண்கள் அதற்கு முக்கியத்துவம் அளித்ததுதான் என்றார். பிரயாக்ராஜில் அண்மையில் முடிவடைந்த கும்பமேளா பற்றி குறிப்பிட்டப் பிரதமர், இந்த முறை அது விவாதத்திற்குரிய விஷயமாக இருந்தது. ஏனெனில், துப்புரவும், தூய்மையும் மிக உயர்ந்த நிலையில் இருந்ததுதான்.  தூய்மை என்பது தற்போது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது என்றும் அவர் கூறினார்.

      தூய்மை இயக்கத்தின் அடுத்தக் கட்டம் என்பது கழிவுப் பொருட்களை செல்வமாக மாற்ற வேண்டும் என்பதுதான் என்று பிரதமர் தெரிவித்தார்.

      இந்திர தனுஷ் இயக்கத்தின் மூலம் குழந்தைகளுக்கு தடுப்பூசி, ஊட்டச்சத்து குறைப்பாட்டைப் போக்குதல் போன்ற விஷயங்கள் பற்றியும் பிரதமர் பேசினார். இந்த இரண்டு விஷயங்களிலும் வெற்றியை உறுதி செய்ய பெண்களின்  பங்கு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டார். 

      மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி மேனகா காந்தி, இந்த நிகழ்ச்சியில் உடனிருந்தார்.

-----



(Release ID: 1568417) Visitor Counter : 243