பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
சர்வதேச மகளிர் 2018ஆம் ஆண்டுக்கான நாரி ஷக்தி புரஸ்கார் விருதை குடியரசுத் தலைவர் நாளை வழங்கவிருக்கிறார்
Posted On:
07 MAR 2019 11:01AM by PIB Chennai
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி புதுதில்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் இந்தியாவில் மகளிரைக் கவுரவப்படுத்தும் மிக உயரிய விருதான நாரி ஷக்தி புரஸ்கார் விருதை குடியரசுத்தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த வழங்கவிருக்கிறார். பெண்களின் சாதனையை பதிவு செய்யும் வகையில், மகளிருக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமூக நலத்திற்காக அயராது சேவை செய்த பெண்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரித்து மகளிர் மற்றும் குழந்தை நல அமைச்சம் நாரி ஷக்தி விருதை வழங்குகிறது. இவ்வருடம் இவ்விருதுக்கென அமைச்சகத்திற்கு வந்து சேர்ந்த சுமார் ஆயிரம் நியமனங்களில் 44 பேர் இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இவ்வருடம் பேடி பச்சாவ் பேடி படாவ் – பெண் குழந்தை பாதுகாப்பு, பெண்குழந்தை கல்வித் திட்டத்தின் கீழ், பிறப்பிலேயே குழந்தை பாலியல் விகிதத்தை அதிகப்படுத்துவதில் சிறப்பான முன்னேற்றம் காட்டிய ஒன் ஸ்டாப் சென்டர் மற்றும் ஒரு மாநிலத்திற்கும் நாரி ஷக்தி விருது வழங்கப்படுகிறது. ஒரே கூரையின் கீழ் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், சட்ட உதவி வழங்கவும், மருத்துவ உதவி, உளவியல் மற்றும் சமூகம் சார்ந்த ஆலோசனை வழங்கவும், ஐந்து நாட்கள் வரை தற்காலிக உறைவிடம் வழங்கவும் 24 மணி நேரமும் ஒருங்கிணைந்த சேவை வழங்குவதற்கென ஒன் ஸ்டாப் சென்டர்ஸ் எனப்படும் அமைப்புக்கள் உருவாக்கப்படுகின்றன.
தனித்தன்மை கொண்ட சவால்களைச் சந்தித்தப்போதிலும் தங்களது கனவுகளை சாதிப்பதில் தடைகளைக் கடந்த அறிவியலாளர்கள், தொழில் முனைவோர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமூகப் பணியாளர்கள், விவசாயிகள், கலைஞர்கள், கட்டட வேலையாட்கள், கடல்சார் பெண் விமானிகள், பெண் கமாண்டோ பயிற்சியாளர்கள், பத்திரிகையாளர்கள், திரைப்பட இயக்குநர்கள் மற்றும் பலர் விருது பெறுகின்றனர்.
*****
(Release ID: 1567761)