குடியரசுத் தலைவர் செயலகம்

ஹக்கீம்பேட்டில் உள்ள இந்திய விமானப் படைத்தளம் மற்றும் ஐந்து அடித்தள பழுதுபார்ப்புக் கிடங்கு ஆகியவற்றுக்கான தனிக் கொடிகளை வழங்கும் தருணத்தில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் அவர்கள் ஆற்றிய உரை

प्रविष्टि तिथि: 04 MAR 2019 1:08PM by PIB Chennai

கோவை சூலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஹக்கீம்பேட்டில் உள்ள இந்திய விமானப் படைத்தளம் மற்றும் ஐந்து அடித்தள பழுதுபார்ப்புக் கிடங்கு ஆகியவற்றுக்கான தனிக் கொடிகளை வழங்கும் தருணத்தில் மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் அவர்கள் ஆற்றிய உரை:

 

 

  1. ஹக்கீம்பேட் இந்திய விமானப் படைத்தளம் மற்றும் ஐந்து அடித்தள பழுதுபார்ப்புக் கிடங்கு ஆகியவற்றுக்கு தனிக்கொடிகளை வழங்க இன்றைய நாளில் இங்கு வருகை தந்தமைக்கு நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

 

  1. இந்த இரண்டு நிலையங்களுமே சிறந்த தொழில் திறனில் செறிவான வரலாற்றைக் கொண்டதாக இருப்பவை என்பதோடு, அமைதியான காலத்திலும் போர்க்காலங்களிலும் நற்பெயரோடும், தனித்திறனோடும் நாட்டிற்கு சேவை செய்து வருபவையும் ஆகும். அவற்றின் சுயநலமற்ற ஈடுபாடு, தொழில் திறன், எதிர்ப்புகளுக்கு இடையே செறிவான துணிவு ஆகியவற்றுக்காக நமது நாடு இன்று இந்தப் பிரிவுகளுக்கு ஆழ்ந்த நன்றியுடனும் பாராட்டுதல்களுடனும் கவுரவிக்க அவற்றை கவுரவிக்க முன்வந்துள்ளது.
  2. நாடுகளுக்கிடையே வளர்ந்து கொண்டே வரும் இந்தியாவின் பெருமைக்கு ஈடான வகையில் நமது ராணுவப் படைகளின் வலிமையும் திறனும் பெருகி வருகின்றன. இந்தியா தொடர்ந்து அமைதியில்தான் நாட்டம் கொண்டதாக, பற்றுறுதி கொண்டதாக இருந்தபோதிலும், தேவைப்படும் போதெல்லாம் நாட்டின் சுயாதிபத்தியத்தைப் பாதுகாப்பதற்காக நமது வலிமை அனைத்தையும் பயன்படுத்தவும் செய்கிறோம்.   உரிய நேரத்தில் செயலாற்ற துணிவுமிக்க, சீருடை அணிந்த நமது படைவீரர்கள், அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, முன்வருவார்கள் என்பதையும் நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன். நமது நாட்டைப் பாதுகாப்பதில் நாம் மிகுந்த உறுதியோடு உள்ளோம் என்பதை  நமக்கு முன்னால் இப்போது நின்று கொண்டிருக்கும் நமது வான்வெளி வீரர்கள் மூலமாக நமது ராணுவப் படைகள் வெளிப்படுத்துகின்றனநன்கறியப்பட்ட பயங்கரவாத முகாம் ஒன்றின் மீது முன்கூட்டியே தாக்குதல் தொடுப்பதற்கான நடவடிக்கையை இந்திய விமானப் படை மிகச் சமீபத்தில் மேற்கொண்டபோது இந்தத் தீரமும் தொழில்திறனும்தான் நம்மிடையே வெளிப்பட்டது.
  3. இந்திய விமானப் படையானது சிறப்பான செயல்பாடு, தொழில்ரீதியிலான செயல்திறன் ஆகியவற்றால் தனித்து விளங்கும் நவீனமான, தொழில்நுட்பத் திறன் வாய்ந்த, தீவிரமான ஒரு படைப் பிரிவாக கடந்த பல ஆண்டுகளாகவே வளர்ச்சி பெற்று வந்துள்ளது. தற்போதைய காலத்தின் முன்னேற்றங்களின் தேவைகளுக்கு ஏற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் வகையில் இந்திய விமானப் படை தொடர்ந்து துரிதமாக தன்னை நவீனமயப்படுத்திக் கொண்டு வருகிறது. முழுமையானதொரு நவீனமயமாக்கல் திட்டத்தையும் அது தற்போது செயல்படுத்தி வருகிறதுநமது நாட்டின் சுயாதிபத்தியமிக்க வான்வெளியை பாதுகாப்பது மட்டுமின்றி, அனைத்து வகையான மனித நேய உதவிகளுக்கான நடவடிக்கைகள், பேரழிவுக் காலத்தில் மேற்கொள்ளப்படும் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் இந்திய விமானப் படை முன்னணியில் விளங்குகிறது. தமது செயல் களத்தை விரிவுபடுத்திக் கொள்ளுதல், தாங்கு சக்தி ஆகியவற்றை வெளிப்படுத்திய துணிவுமிக்க நமது விமானப் படை வீரர்கள் நமது நாட்டின் பெருமிதத்திற்கான மகத்தான ஆதாரசக்தியாக விளங்குகின்றனர்.
  4. நமது விமானங்களை எப்போதும் செயல்திறன் மிக்கதாக வைத்திருப்து என்பது மிகவும் முக்கியமானதொரு பணியாகும். இந்த வகையில் ஐந்து அடித்தள பழுதுபார்ப்பு கிடங்கானது கிரண், ஆவ்ரோ, டோர்னியர் போன்ற விமானங்களை பழுது பார்ப்பது; முற்றிலுமாக சீரமைப்பது ஆகிய கடமைகளை நிறைவேற்றி வருகிறது. மேலும் இந்த விமானங்களில் பலவும் 30 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட செயல்படும் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பது மேலும் சிறப்பானதாகும். சுயச் சார்பை வளர்த்தெடுக்கும் வகையில் உள்நாட்டு மயமாக்கல் நடவடிக்கைகள் பலவற்றையும் இந்த பழுதுபார்ப்புக் கிடங்கு மேற்கொண்டு வந்துள்ளது. மேலும்  தனது அமைப்புரீதியான திறனை மேம்படுத்திக் கொள்வதிலும் மிகச் சிறப்பான பங்களிப்பு செய்துள்ளது. புதிய கருத்துக்கள், கண்டுபிடிப்புகள், தொழில்நுட்ப மேம்பாடுகள் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் இந்தக் கிடங்கு அதன்காய கல்பா’ (நீடித்த வாழ்வு) என்ற முழக்கத்திற்கான முன்னுதாரணமாகவும் திகழ்கிறது. ’இந்தியாவில் உற்பத்தி செய்என்ற இயக்கத்தின் அடியொற்றி பாதுகாப்பு கருவிகளைப் பொறுத்தவரையில் உள்நாட்டு வடிவமைப்பு மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் கணிசமான சுயச் சார்பை வளர்த்தெடுப்பதில் இந்தக் கிடங்கின் முயற்சிகள் பாராட்டிற்குரியனவாகும்.

 

  1. ஹக்கீம்பேட்டில் உள்ள விமானப் படை நிலையம் மிகச் சிறந்த முறையில் நாட்டிற்கு சேவை செய்துள்ளது. இந்திய விமானப் படையின் போர் விமான ஓட்டிகளுக்கு தரமிக்க பயிற்சியை அது வழங்கி வருகிறது. இந்த நிலையத்தில் பெற்ற பயிற்சியை வலுவான அடித்தளமாகக் கொண்டு போர் விமானங்களின் சிறப்பான செயல்பாட்டிற்கான மேலும் அதிகமான பயிற்சிகளையும் விமான ஓட்டிகள் பெற முடிந்துள்ளது1965 மற்றும் 1971-ம் ஆண்டுகளில் நடைபெற்ற போர்களின்போது இந்த நிலையத்தைச் சேர்ந்த விமானப் பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களும் களத்தில் இறங்கி மகத்தான துணிவுடனும் குறிப்பிடத்தக்க செயல்திறனுடனும் நாட்டிற்குச் சேவை செய்துள்ளனர்.
  2. பெண் விமான ஓட்டிகளுக்கு 1995-ம் ஆண்டில் ஹெலிகாப்டர் பிரிவிலும், 2016-ம் ஆண்டில் வான்வெளியில் சண்டையில் ஈடுபடும் விமானப் பிரிவிலும் பயிற்சி தருவதை துவக்கியதும் இந்த ஹக்கீம்பேட் விமானப் படை நிலையத்தின் மற்றொரு சாதனையாக விளங்குகிறது. இந்த நிலையத்தைச் சேர்ந்தவர்கள் பல்வேறு மனித நேய உதவிக்கான நடவடிக்கைகள், பேரழிவுக் காலங்களில் நிவாரண நடவடிக்கைகள் ஆகியவற்றிலும் பங்கேற்று வந்துள்ளனர்
  3. அவர்களது தனிச்சிறப்பு மிக்க செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையிலும் ஏற்றுக் கொள்ளும் வகையிலும் ஹக்கீம்பேட் விமானப் படை நிலையத்திற்கும் ஐந்து தள பழுதுபார்ப்பு கிடங்கிற்கும் தனிக் கொடியை வழங்குவதில் நான் மிகவும் பெருமையடைகிறேன். நாட்டிற்காக சுயநலமற்ற தியாகங்களையும் சேவைகளையும் வழங்கிய, கடந்த காலத்திலும் தற்போதும் இந்த இரு நிலையங்களிலும் பணியாற்றியவர்கள், அவர்களது குடும்பத்தார் ஆகியோருக்கு சிறப்பான இத்தருணத்தில் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு உண்மையிலேயே உங்களை நினைத்து பெருமிதம் கொள்கிறது. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் மிகச் சிறப்பான, ஒளிமிகுந்த எதிர்காலம் நிலைக்கட்டும் என வாழ்த்துகிறேன்.

ஜெய் ஹிந்த்!

 


(रिलीज़ आईडी: 1567274) आगंतुक पटल : 266
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , हिन्दी