உள்துறை அமைச்சகம்

காணாமல் போன மற்றும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை அணுகுவது குறித்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 28 FEB 2019 10:41PM by PIB Chennai

காணாமல் போன மற்றும் சுயநலத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட குழந்தைகள் பற்றிய தகவல்களை அணுகுவது குறித்து இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவின் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் மற்றும் அமெரிக்காவின் ”காணாமல் போன சுயநலத்திற்காக பயனப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கான தேசிய மையத்திற்கு” இடையே கையெழுத்தாகியுள்ளது.

பயன்பாடு

   இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காட்சிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல்  முறைகேடுகள் பற்றிய ஆதாரங்கள் குறித்த தகவல் பரிமாற்றத்திற்கு புதிய முறைமையை அமைப்பதற்கு  வழி வகுப்பதோடு, குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உதவும். மேலும், மனிதனுக்குரிய கண்ணியத்தை மேம்படுத்தும் வகையில், இணையதளத்திலிருந்து குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாசக் காட்சிகள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் முறைகேடுகள் பற்றிய ஆதாரங்களை நீக்கிட சட்டத்தை அமல்படுத்தும் முகமைகளுக்கு உதவும், 
 

----


(Release ID: 1567015) Visitor Counter : 168


Read this release in: English , Urdu , Kannada