வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005 திருத்தத்திற்கான அவசரச் சட்டப் பிரகடனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
Posted On:
28 FEB 2019 10:49PM by PIB Chennai
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005-ன் பிரிவு-2ன் உட்பிரிவு-5ல் “நபர்” என்பதற்கான விளக்கத்திற்கு திருத்தம் கொண்டு வருவதற்கான அவசரச் சட்ட பிரகடனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அறக்கட்டளை நிறுவனம் அமைப்பதற்கு வழி வகுக்கப்படுகிறது. அதோடு நபர், மற்றும் நிறுவனம் என்பதற்கான இந்த விளக்கத்தை சேர்த்துக் கொள்வதற்கான நெகிழ்வு மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது.
தாக்கம்
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005-ன் தற்போதைய ஏற்பாட்டின்படி, ”அறக்கட்டளைகள்” சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் நிறுவனம் அமைக்க அனுமதிக்கப்படுவதில்லை, இந்தச் சட்டத்திருத்தத்தின் மூலமாக சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் அறக்கட்டளைகள் நிறுவனங்கள் அமைப்பதற்கான அனுமதி குறித்து பரிசீலிக்கப்படும். இது சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் முதலீடுகளுக்கு வழி வகுக்கும்.
-----
(Release ID: 1567001)