வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்

ஆர்.ஆர்.டி.எஸ்ஸின் தில்லி-காஸியாபாத்-மீரட் வழித்தடத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 19 FEB 2019 8:56PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை பின்வரும் திட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளது:

  1. பிராந்திய விரைவு ரயில் போக்குவரத்து முறையான ஆர்.ஆர்.டி.எஸ். திட்டத்தை ரூ.30,274 கோடி செலவில் 81.15 கிலோமீட்டர் தூரத்திற்கு கட்டுமானம் செய்தல்
  2. ரூ.5,634 கோடி மத்திய அரசின் நிதியுதவி
  3. இத்திட்டத்திற்கான நிறுவன ஏற்பாடு மற்றும் சட்ட கட்டமைப்பு
  4. திட்ட ஒப்புதலுக்கான நிபந்தனைகள்

அதிவிரைவு பிராந்திய ரயில் போக்குவரத்து முறையான ஆர்.ஆர்.டி.எஸ்.  இந்தியாவில் முதன் முறையாக செயல்படுத்தப்பட உள்ளது.  இது நடைமுறைக்கு வந்தால், தேசிய தலைநகரப் பகுதியில், விரைவான, மிக வசதியான மற்றும் பாதுகாப்பான பயணியர் போக்குவரத்து முறையாக இருக்கும்.  

*****


 


(रिलीज़ आईडी: 1565393) आगंतुक पटल : 119
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Telugu , Kannada