பிரதமர் அலுவலகம்

வாரணாசிக்கு பிரதமர் பயணம்

முதன் முறையாக மின்மயமாக்கப்பட்ட டீசல் தொடர் வண்டியை கொடியசைத்து துவக்கி வைத்தார்
குரு ரவிதாஸ் பிறந்த இடத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் அடிக்கல்லை நாட்டினார்
அரசு ஊழல் செய்பவர்களை தண்டிக்கிறது, நேர்மையானவர்களுக்கு பரிசளிக்கிறது, பிரதமர் மோடி

Posted On: 19 FEB 2019 12:52PM by PIB Chennai

உத்தரப்பிரதேசம் வாரணாசிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பயணம் மேற்கொண்டார். அங்கு அவர், ரவிதாஸ் ஜெயந்தி கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில் குரு ரவிதாஸ் பிறந்த இடத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் அடிக்கல்லை நாட்டினார்.

முதன் முறையாக மின்மயமாக்கப்பட்ட டீசல் தொடர் வண்டியை பிரதமர் வாரணாசியில் உள்ள டீசல் ரயில் பணிமனையிலிருந்து கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நூறு சதவீதம் மின்மயமாக்குதல் என்ற இந்திய ரயில்வேயின் தொலை நோக்குப் பார்வையின் அடிப்படையில் வாரணாசி டீசல் ரயில் பணிமனை புதுவகையான மின்மயமாக்கப்பட்ட டீசல் தொடர் வண்டியை உருவாக்கியுள்ளது. தேவையான அனைத்து சோதனைகளுக்குப் பிறகு, பிரதமர் ஆய்வு மேற்கொண்டு அதனை கொடியசைத்துத் துவக்கி வைத்தார். அனைத்து டீசல் தொடர் வண்டிகளையும் மின்மயமாக்க வேண்டும்  என்று இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. இதன் மூலம் இந்த ரயில்களை அவற்றின் முழு ஆயுட்காலத்திற்கும் பயன்படுத்த முடியும். இழுப்புக்கு தேவைப்படும் எரிசக்தியைக் குறைக்கவும், கார்பன் வெளியீட்டைக் குறைக்கவும் இந்தத் திட்டம்  உதவும். இரண்டு டபிள்யு.டி.ஜி 3 ஏ டீசல் ரயில் வண்டியை 10,000 ஹெச்.பி. திறன் கொண்ட இரு மின்னணு டபிள்யு.ஏ.ஜி.சி. 3 ஆக மாற்ற வெறும் 69 நாட்களே தேவைப்பட்டன. “இந்தியாவில் உற்பத்தி செய்வோம்” முன்முயற்சியான இந்த மாற்றம், ஒட்டுமொத்த உலகிற்காகவும் இந்திய ஆய்வு மற்றும் ஆராய்ச்சித் துறை செய்த புதிய கண்டுபிடிப்பாகும்.

ரவிதாஸ் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர், திரு.குரு ரவிதாஸ் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினார்.சிர்கோவெர்தன்பூரில் உள்ள ஸ்ரீ குரு ரவிதாஸ் ஜென்மஸ்தன் கோயிலில் குரு ரவிதாஸ் பிறந்த இடத்தை மேம்படுத்தும் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

நலிந்தோருக்கு உதவும் வகையில் அமைக்கப்பட்டுள்ள அரசின் திட்டங்கள் குறித்து விவரித்த பிரதமர், “ஏழைகளுக்காக நாங்கள் இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளோம். இதனால் நலிந்தோர் மரியாதைக்குரிய வாழ்க்கையை வாழ முடியும்”. இந்த அரசு, ஊழல் செய்பவர்களை தண்டிக்கிறது, நேர்மையானவர்களுக்குப் பரிசளிக்கிறது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த உணர்ச்சிபூர்வமான கவிஞரின் போதனைகள் நமக்கு ஒவ்வொரு நாளும் ஊக்கமளிக்கின்றன என்று கூறினார். மேலும், சாதி அடிப்படையிலான பாகுபாடு இருந்தால் மக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முடியாது. மேலும் சமூகத்தில் சமத்துவமும் இருக்காது. புனித ரவிதாசின் பாதையை அனைவரும் பின்பற்ற வேண்டும். இந்தப் பாதையை நாம் பின்பற்றியிருந்தால் ஊழலை முழுவதாக அழித்திருக்க முடியும். இந்தத் திட்டத்தின் அங்கமாக புனித குரு ரவிதாசின் சிலையுடன் ஒரு பெரிய பூங்கா அமைக்கப்பட்டு, யாத்திரை மேற்கொள்ளும் நபர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் செய்து தரப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.

*****

 



(Release ID: 1565245) Visitor Counter : 131