மத்திய அமைச்சரவை

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே கம்பெனி செயலாளர் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

Posted On: 06 FEB 2019 9:55PM by PIB Chennai

இந்தியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையே கம்பெனி செயலாளர் துறையில் பரஸ்பர ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு  ஒப்பந்தத்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இருநாடுகளிலும் உள்ள தொழில் புரியும் கம்பெனி செயலாளர்களின் அந்தஸ்து மற்றும் கௌரவத்தை மேம்படுத்தவும், ஆசியா - பசிபிக் மண்டலத்தில் எல்லைக்கப்பால் அவர்கள் சென்று வருவதற்கு வசதி ஏற்படுத்தவும் இந்த ஒப்பந்தம் உதவும்.

விவரங்கள் :

இருநாடுகளிலும் உள்ள தொழில் புரியும் கம்பெனி செயலாளர்களின் அந்தஸ்து மற்றும் கௌரவத்தை மேம்படுத்துவதையும், ஆசியா - பசிபிக் மண்டலத்தில் எல்லைக்கப்பால் அவர்கள் சென்று வருவதற்கு வசதி ஏற்படுத்துவதையும் நோக்கமாகக்  கொண்டது இந்த ஒப்பந்தம்.  இது இந்திய கம்பெனி செயலாளர்கள் நிறுவனம் மற்றும் மலேசிய கம்பெனி செயலாளர்கள் சங்கம் ஆகியவற்றிடையே ஏற்பட்டு தற்போது அமைச்சரவை ஒப்புதலைப் பெற்றுள்ளது.

பின்னணி:

இந்திய கம்பெனி செயலாளர்கள் நிறுவனமானது, இந்திய நாடாளுமன்றம் இயற்றிய 1980 கம்பெனி செயலாளர்கள் சட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட சட்டப்படியான நிறுவனம். இந்தியாவில் கம்பெனி செயலாளர்கள் தொழில் துறையை உருவாக்கி கட்டுப்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டது. மலேஷியாவில்  இதே நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது மலேஷிய கம்பெனி  செயலாளர்கள் சங்கம்.

-----------



(Release ID: 1563225) Visitor Counter : 120