மத்திய அமைச்சரவை

இந்திய விமான நிலைய ஆணையத்தின் சில செயல்பாட்டு பிரிவுகளின் ஊழியர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்கள் துறை நிர்ணயித்த உச்சவரம்பான 50 சதவீதத்திற்கு கூடுதலாக படிகள் வழங்கப்பட்டு வருவதை முறைப்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 06 FEB 2019 9:47PM by PIB Chennai

இந்திய விமான நிலைய ஆணையத்தின் சில செயல்பாட்டு பிரிவுகளின் ஊழியர்களான விமான பைலட்டுகள், தொலைத்தொடர்பு அலுவலர்கள், விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் ஆகியோருக்கு பொதுத்துறை நிறுவனங்கள்  துறை  நிர்ணயித்த புதிய ஊதிய நிர்ணயத்துக்கு முந்தைய உச்சவரம்பான 50 சதவீதம்  / மாற்றியமைக்கப்பட்ட ஊதிய உச்சவரம்பான 25 சதவீதம்  ஆகியவற்றுக்கு கூடுதலாக படிகள் (வீதாச்சார படி, மனஅழுத்தப் படி, திறமை படி, பறக்கும் நேரத்திற்கான படி, பயிற்சியாளர் படி)  வழங்கப்பட்டு வருவதையும் அந்தப் படிகளை மாற்றியமைக்கப்பட்ட ஊதிய வீத உச்சவரம்பான 35 சதவீதத்திற்கு அப்பாற்பட்டு  வைத்து நடத்துவதையும் முறைப்படுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.  இவர்களது பணிகள், மிகவும் சிக்கலான, மிக உயரிய அறிவு மற்றும் நிபுணத்துவத்தை உள்ளடக்கிய அறிவு உணர்வு சார்ந்த குறிப்பிட்ட திறன்களை செயல் அளவில் பயன்படுத்தக் கூடிய, தகவல் தொடர்பு அம்சங்கள் மற்றும்  மனித உறவுகள் சார்ந்தவையாக அமைந்துள்ளன.

     தற்காலத்தில்  விமானப் போக்குவரத்து பலமடங்கு உயர்ந்திருப்பதாலும், இந்தத் தொழில்நுட்ப பணியாளர்கள் விமான இயக்க  செயல்பாடுகளை, பாதுகாப்பாக மேற்கொண்டு வருவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலைகளுக்கு சிறந்த திறன் படைத்தவர்களை  ஈர்ப்பதற்கும், தற்போது இவற்றில் பணி புரிவோரை அதிலேயே நிலைக்கச் செய்வதற்கும், விமானப் பயணிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சேவைகளை வழங்குவதற்கும், இந்தப் பணியாளர்களுக்கு உரிய வகையில் ஈடு செய்ய வேண்டியது அவசியமாகிறது.

-----



(Release ID: 1563191) Visitor Counter : 102