நிதி அமைச்சகம்
சரக்கு மற்றும் சேவை வரி
प्रविष्टि तिथि:
01 FEB 2019 1:26PM by PIB Chennai
சரக்கு மற்றும் சேவை வரி சீர்திருத்தங்கள் காரணமாக வரி வருவாய்க்கான அடித்தளம் அதிகரித்திருப்பதோடு, வரி வருவாய் அதிகரித்து வர்த்தகமும் எளிமைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் திரு பியூஷ் கோயல் தெரிவித்தார்.
இன்று 2019-20 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து பேசிய அவர், சுதந்திரத்திற்குப் பின் மேற்கொள்ளப்பட்ட் மிகப்பெரிய வரிச்சீர்திருத்தம் இது என்று குறிப்பிட்டார்.
மத்திய – மாநில அரசுகள் விதித்த 17 வேறுபட்ட வரிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரு சரக்கு மற்றும் சேவை வரியாக கொண்டுவரப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இதனால், சரக்கு மற்றும் சேவை வரி இந்தியாவை பொது சந்தையாக மாற்றியுள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்தால், மாநிலங்களுக்கு இடையிலான சரக்குப் போக்குவரத்து விரைவாகவும், மிகவும் திறமையாகவும் பிரச்சினைகள் இல்லாமலும் நடைபெற்று வருகிறது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்
தற்போது ஜிஎஸ்டி வரி விதிப்புக்கான படிவங்கள் இணையதளங்கள் மூலம் நிரப்பப்படுவதாகவும், அவர் கூறினார்.
மத்திய அரசு, மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் அடங்கிய ஜிஎஸ்டி கவுன்சில் இறுதி செய்த ஜிஎஸ்டி வரி அதற்கு முன்பு இருந்ததைவிட குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டது. அதற்குப்பின்னர், ஜிஎஸ்டி வரி விதிப்பு தொடர்ந்து குறைக்கப்பட்டு, ஆண்டுக்கு சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் நுகர்வோர்களுக்கு பயனளிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அன்றாடம் பயன்படுத்தக் கூடிய பொருட்களுக்கான வரி பூஜ்யம் சதவீதம் முதல் ஐந்து சதவீதம் என்ற அளவிற்குள் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
வீடு வாங்குவோருக்கான ஜிஎஸ்டி சுமையை குறைப்பதற்காக அமைச்சர்கள் குழு ஒன்றை ஜிஎஸ்டி கவுன்சில் அமைத்துள்ளது என்றும், விரைந்து இந்தக் குழு தனது பரிந்துரையை அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
*****
(रिलीज़ आईडी: 1562339)
आगंतुक पटल : 378