நிதி அமைச்சகம்

அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது

प्रविष्टि तिथि: 01 FEB 2019 1:32PM by PIB Chennai

அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தின்மூலம் வறுமை, ஊட்டச்சத்துக்குறைவு, குப்பைக் கழிவுகள், எழுத்தறிவின்மை போன்ற குறைகள் எல்லாம் கடந்த கால விஷயமாகி விடும் என்று மத்திய நிதியமைச்சர் திரு பியூஷ் கோயல் பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.  மேலும், நவீன தொழில்நுட்பத்துடன் அதிக வளர்ச்சி, சமத்துவம் மற்றும் வெளிப்படைத்தன்மையுள்ள சமூகமாக இந்தியா உருவாகும் என்றும் அவர் கூறினார். 

அடுத்த ஐந்தாண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு இருக்கும் என்றும், அதன் பிறகு 10 டிரில்லியன் டாலர் மதிப்புக்கு உயரும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

*********


(रिलीज़ आईडी: 1562283) आगंतुक पटल : 226
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , Bengali , Gujarati