வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சகம்
பிரதமரின் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 68,110 வீடுகள்
प्रविष्टि तिथि:
31 JAN 2019 1:26PM by PIB Chennai
நகரத்தில் உள்ள ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 72.66 லட்சம் வீடுகளை கட்ட மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் தமிழகத்தில் 68,110 வீடுகள் கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற மத்திய ஒப்புதல் மற்றும் கண்காணிப்பு குழுவின் 42 வது கூட்டத்தில், இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதில் தமிழகத்திற்கு 68,110 வீடுகளுடன் ஆந்திராப் பிரதேசத்திற்கு 1,05,956 வீடுகள், மேற்கு வங்காளத்திற்கு 1,02,895 வீடுகள், உத்திரப் பிரதேசத்திற்கு 91,689 வீடுகள், மத்தியப் பிரதேசத்திற்கு 35,377 வீடுகள், கேரளாவிற்கு 25,059 வீடுகள், மகாரஷ்டிராவிற்கு 17,817 வீடுகள், ஒடிசாவிற்கு 12,290 வீடுகள், பீகாருக்கு 10,269 வீடுகள், உத்ராகண்டிற்கு 9,208 வீடுகளும் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலர் திரு. துர்கா ஷங்கர் மிஸ்ரா தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் ரூ. 22,492 மதிப்பிலான 940 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய நிதி உதவியாக ரூ. 7,180 கோடி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
****
(रिलीज़ आईडी: 1562065)
आगंतुक पटल : 195