எஃகுத்துறை அமைச்சகம்

எஃகு தயாரிப்பு பற்றிய எஃகு அமைச்சகத்தின் முன்முயற்சி-இந்தியாவில் தயாரிப்போம்

Posted On: 18 DEC 2018 5:26PM by PIB Chennai

தேசிய எஃகு கொள்கை 2017 மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் இரும்பு மற்றும் எஃகு பொருட்கள் கொள்கை 2017 ஆகியவற்றின் காரணமாக, எஃகு பொருட்களின் உற்பத்தியும், பயன்பாடும் பெருமளவில் வளர்ச்சி கண்டுள்ளன. உள்கட்டமைப்பு வளர்ச்சியில் இந்திய அரசின் உறுதிப்பாடும், முன்முயற்சியும் இந்தியாவில் தயாரிப்போம் மற்றும் பொலிவுறு நகரங்கள் ஆகிய திட்டங்கள் எஃகு பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி, ஏற்படக் காரணமாக  அமைந்துள்ளன. 50 சதவீதத்திற்கும் அதிகமான உற்பத்தி நாடெங்கும் உள்ள இரண்டாம் நிலை எஃகு தயாரிப்பாளர்களாலேயே சாத்தியமாகிறது.  சிறிய அளவிலான இந்த உற்பத்தியாளர்களால் நடத்தப்படும் ஆலைகளில்தான் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பலருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கின்றன.

      ரயில்வே துறை, சாலைப் போக்குவரத்து, ஊரக வளர்ச்சி, சுற்றுச் சூழல், வனத்துறை, நிலக்கரி மற்றும் நுகர்வோர் நல அமைச்சகங்களோடு இணைந்து எஃகு அமைச்சகம், எஃகு பயன்பாட்டினை அதிகரித்திருப்பதோடு, எஃகு திட்டங்களை துரிதப்படுத்துவதிலும் கவனம் செலுத்தியுள்ளது.

      அரசின் முக்கிய திட்டங்களான 100 பொலிவுறு நகரங்கள் திட்டம், அனைவருக்கும் வீட்டு வசதித் திட்டம், புத்தாக்கம் மற்றும் நகர உருமாற்றத்திற்கான அடல் திட்டம், அதிவேக புல்லட் ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் என்று இவை யாவும் நாட்டில் எஃகு பொருட்களின் தேவையை அதிகரிப்பதில் பெரும்பங்காற்றியுள்ளன என்று மத்திய எஃகுத் துறை அமைச்சர் திரு. பீரேந்தர் சிங் கூறியுள்ளார்.

******


(Release ID: 1561949) Visitor Counter : 191


Read this release in: English , Hindi , Bengali