ஊரக வளர்ச்சி அமைச்சகம்
தீன்தயாள் அந்தியோதயா திட்டம் ஆண்டு இறுதி மறு ஆய்வு – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (ஊரக மேம்பாடு அமைச்சகம்)
Posted On:
03 JAN 2019 4:41PM by PIB Chennai
மத்திய ஊரக மேம்பாட்டு அமைச்சகம் செயல்படுத்தி வரும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (DAY-NRLM) தீன்தயாள் அந்தியோதயா திட்டம் 8 முதல் 9 கோடி வரையிலான ஏழை எளியோரின் இல்லங்களை சென்றடையும் வகையில் திட்டத்தை வரையறுத்துள்ளது. ஒவ்வொரு இல்லத்திலிருந்தும் ஒரு பெண் உறுப்பினரை சமூக அடிப்படையில் தேர்ந்தெடுத்து சுய உதவிக் குழுக்களை அமைத்து கிராமப்புற அளவிலும், உயர் அளவிலும் கூட்டமைப்புகளை அமைக்க முனைந்துள்ளது.
முன்னேற்றம்:
- 2018-19 காலகட்டத்தில் (அக்டோபர் 2018-ன் படி) கூடுதலாக 588 வட்டங்கள் தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்படி, மொத்தம் 5054 வட்டங்கள் இந்த இயக்கத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன.
- 2018-19 ஆம் ஆண்டில் இதுவரை 73 லட்சம் இல்லங்கள் மூலம் 6.75 லட்சம் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- சுயஉதவிக் குழுக்கள் ரூ.743.29 கோடி மூலதன ஆதரவுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
- 1.63 லட்சம் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதியாக மொத்தம் ரூ.24,082 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. 92,765 சுயஉதவிக் குழுக்களுக்கும், சுயஉதவிக் குழுக்களின் கூட்டமைப்புக்கும் சமூக முதலீட்டு நிதியாக 2018-19-ல் ரூ.5,247 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
- தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தின்கீழ், சுயஉதவிக் குழுக்கள் – வங்கி இணைப்பு நிகழ்வு ஆண்டுக்கு ஆண்டு வெகுவாக வளர்ச்சி கண்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் சுமார் 17.57 லட்சம் சுயஉதவிக் குழுக்களுக்கு அக்டோபர் 2018 வரை ரூ.2,79,011 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
வேளாண் தொழில் வாய்ப்புகள்
- தீன்தயாள் அந்தியோதயா திட்டம் – தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் இந்த ஆண்டு இயற்கை விவசாயத்தை மேம்படுத்துவதை மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்களுடன் முன்னெடுத்து சென்றுள்ளது. இயற்கை விவசாய திட்டத்தின் கீழ் மொத்தம் 1646 இயற்கை கிராம முனையங்கள், 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்டன. நடப்பு ஆண்டில் 25 சதவீத இயற்கை கிராம முனையங்களில் இயற்கை வேளாண் திட்டங்களை மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் நடவடிக்கையாக மொத்தம் 57,270 மகளிர் விவசாயிகள் பதிவு செய்யப்பட்டு 5,816 கிராமக் குழுக்கள் மூலம் இயற்கை விவசாய தொழில் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.
- ஊரக வாழ்வாதார இயக்கத்தின்கீழ் 2018-19 ஆம் ஆண்டில் மொத்தம் 14.03 லட்சம் மகளிர் விவசாயிகள் அடையாளம் காணப்பட்டனர்.
- பயிற்சி தகுதி மேம்பாட்டுத் திட்டத்தில், நடப்பு ஆண்டில் மொத்தம் 7,283 ஊரக தொழில்வாய்ப்புகளில் வேளாண் மகளிர் மற்றும் ஆடு வளர்ப்போருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
- அனைத்து விவசாய தொழில் வாய்ப்புகளிலும் உணவு மற்றும் சத்துணவு பாதுகாப்பை முக்கிய நோக்கமாக கொண்டு அதனை உறுதி செய்யும் வகையில் விவசாய சத்துணவு தோட்டங்கள், மகளிர் விவசாய இல்லங்கள் உருவாக்கப்படுகின்றன. நடப்பு ஆண்டில் விவசாய சத்துணவு தோட்டங்கள் 10.86 லட்சம் வேளாண் மகளிர் இல்லங்களில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
- மகளிர் விவசாயியின் கடுமையான உழைப்பை குறைக்கும் வகையிலும், அவர்கள் விவசாய கருவிகளை பயன்படுத்த செய்யும் வகையிலும் தீன்தயாள் அந்தியோதயா திட்டத்தில் வாடகை மையங்கள் மேம்படுத்தப்பட்டன. மொத்தம் 806 வாடகை மையங்கள் 2018-19-ல் நிறுவப்பட்டுள்ளன.
- சிறு மற்றும் சாதாரண உற்பத்தியாளர்களை சந்தைப்படுத்துதலுக்கு உட்படுத்தும் வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2018-19-ல் 3 மகளிர் பால் உற்பத்தியாளர் நிறுவனங்கள் மத்திய பிரதேசம் மற்றும் பீகாரில் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன.
விவசாயம் அல்லாத தொழில் வாய்ப்புகள்
- ஆஜிவிகா கிராம விரைவுத் திட்டம், ஊரக பகுதிகளில் பாதுகாப்பான சாதகமான சமூக கண்காணிப்புடன் கூடிய போக்குவரத்து சேவைகளை உள்ளடக்கியதாகும்.
- கிராம தொழில் முனைவோர் திட்டம் தொடங்குதல் அந்தியோதயா திட்டத்தின் கீழ் ஒரு துணை திட்டமாகும். இது தூய்மையான சுற்றுச்சூழல் மிகுந்த பகுதிகளில் குறிப்பாக ஊரக பகுதிகளில் சிறு தொழில்களை மேம்படுத்துவதை உணர்த்தி வருகிறது. இந்த திட்டம் நாடு முழுவதும் 131 வட்டங்களில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் கிராம தொழில் முனைவோர் திட்டத்தின்கீழ், 9,282 நிறுவனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
***
(Release ID: 1561908)
Visitor Counter : 1012