பிரதமர் அலுவலகம்

நேதாஜி இந்திய மண்ணில் மூவர்ண கொடியை ஏற்றியதன் 75-வது ஆண்டு நினைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றிய உரை

இடுகை இடப்பட்ட நாள்: 30 DEC 2018 10:01PM by PIB Chennai

அன்னை இந்தியாவுக்கு வெற்றி உண்டாகட்டும்!

வந்தே மாதரம்! 

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

இந்த நாளில் தான்  நேதாஜி இந்த இடத்திற்கு வருகை தந்தார். இப்போது நீங்கள் அனைவரும் மொபைல் போன்களை கையில் எடுத்து அதன் ப்ளாஷ் லைட்டை ஆன் செய்யுங்கள், அவரை நினைவு கூறும் வகையில் அவருக்கு அஞ்சலி செலுத்துவோம். என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்.

நேதாஜி ஜிந்தாபாத்!

நேதாஜி ஜிந்தாபாத்!

நேதாஜி ஜிந்தாபாத்!

சுபாஷ் பாபு ஜிந்தாபாத்!

சுபாஷ் பாபு ஜிந்தாபாத்!

சுபாஷ் பாபு ஜிந்தாபாத்!

வந்தே மாதரம்! 

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

அனைவருக்கும் நன்றி.

   மேடையில் அமர்ந்துள்ள பிரமுகர்களே, இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்துள்ள சுபாஷ் பாபுவின் குடும்ப உறுப்பினர்களே,  பெருந்திரளாக வந்துள்ள எனதருமை சகோதரர்களே, சகோதரிகளே,

     சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த எண்ணிலடங்கா தேசப்பக்தர்களின்  தியாகம் மற்றும் வீரத்தால் புனிதமாக்கப்பட்ட இந்த மண்ணுக்கு தலை வணங்குகிறேன். அந்தமான் நிக்கோபார் தீவுகள் இயற்கை  அழகின் சின்னம் மட்டுமின்றி இந்தியர்களுக்கு யாத்திரை மையமும் ஆகும். இந்தப் பகுதியின் பொன் வரலாறு, வரலாற்றுப் பெருமை, இந்த பூமியை மட்டுமன்றி அதன் கடந்தகாலத்தையும் பிரகாசிக்கச் செய்கிறது. இந்தத் தீவுக் குழுக்கள் நமது சுதந்திர போராட்டத்தின் சின்னமாகும். ஒவ்வொரு இந்தியனின் வீரச்செயல் மற்றும் மன உறுதிக்கும் அது சின்னமாகும்.

நண்பர்களே,

   நாட்டின் கடந்த காலம், தற்போதைய காலம் மற்றும் எதிர்காலத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தீவுக்குழுவிற்கு அதிகாரம் அளிப்பதில் எமது அரசு உறுதியுடன் உள்ளது.  இதனை நாட்டின் மேம்பாட்டு வரலாற்றில் முக்கியப் பகுதியாக மாற்ற உறுதி பூண்டுள்ளோம். இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் இங்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தொடங்கப்படுகின்றன.  அந்தமானின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும், வசதிகளை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு அடிக்கற்கள் நாட்டப்படுகின்றன. இந்தத் திட்டங்கள் கல்வி, மருத்துவம், சாலை மேம்பாடு, சுற்றுலா, தொழிலியல், வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் தொடர்பு கொண்டவை. இந்த பல்வேறு திட்டங்களுக்காக எனதருமை சகோதர, சகோரிகளுக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நண்பர்களே,

  நாட்டின் சுதந்திரத்துடன் தொடர்புடைய இரண்டு நினைவுச் சின்னங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.  முதலில்  நான் தனிமைச் சிறைச்சாலைக்கு சென்று பார்த்தேன். அடுத்தபடியாக 75 ஆண்டுகளுக்கு முன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் , நாட்டின் விடுதலையை பிரகடனம் செய்து தேசிய கொடியைப் பறக்க விட்ட இடத்திற்கு சென்றேன்.

நண்பர்களே,

தனிமைச் சிறையின் வளாகத்திற்குள் நுழைந்தவுடன் முற்றிலும் புதிய உணர்வு மனதை நிரப்புகிறது. அனைத்துவிதமான கொடுமைகளையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட இங்கிருந்தவர்களின் திறன் கண்டு வியப்படைகிறேன்.  இந்த தனிமைச் சிறை வளாகத்தில் நடக்கும் போது இந்தியத் தாயின் வீரமிக்க மக்கள், தங்கள் ரத்தத்தினாலும் வியர்வையினாலும் கடல் அலைகள் மீது “பாரத் மாதா கி ஜெய்” என்று எழுதியதை உணர முடிகிறது.  தங்கள் வாழ்கையின் ஒவ்வொரு தருணத்தையும் எரித்து சுதந்திரத்தின் ஒளிக்கற்றை உதயமாக அவர்கள் வழி வகுத்தார்கள். 

  நாம் வாசித்தும் கேட்டும் அறிந்த வீர் சர்க்கார் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வும், நம் கண் முன்னே, தற்போது வருகிறது. இந்த தனிமைச் சிறைகளில் சாவர்க்கர்,  பாபா பான்சிங், மகாவீர் சிங், இந்திர தனுஷ் ரே போன்ற ஆயிரக்கணக்கான புரட்சியாளர்கள் பல ஆண்டுகளைக் கழித்தனர்;  கொடுமைகளைத் தாங்கினர் என்பதால் இவைகள் அனைத்தும் நம்மைப் பொறுத்தவரை கோவில்கள்தான். இந்த தனிமைச் சிறையின் மூலை முடுக்கையெல்லாம்  சுதந்திரப் போராட்ட வீர்ர்களான பாரேந்திர குமார் போஸ், உல்லாஸ்கர் தத், பிரத்விசிங் ஆசாத், த்ரிலோக்கியா நார்த் சக்ரவர்த்தி, பாய் பிரமானந்த் போன்றோர் மிளிரச் செய்தனர். பெயர் தெரியாத சுதந்திரப் போராட்ட வீரர்களை நன்றியுள்ள நாடு ஒரு போதும் மறக்க இயலாது.

என்னுடன் சேர்ந்து சொல்லுங்கள்  -

உயிர்த்தியாகம் செய்தோர் என்றென்றும் வாழ்க!

உயிர்த்தியாகம் செய்தோர் என்றென்றும் வாழ்க!

நண்பர்களே

சுதந்திரப் போராட்ட வீர்ர்கள் என்று வரும் போது சுபாஷ் சந்திர போசின் பெயர் நம்மை பெரிதும் பெருமை கொள்ளச் செய்கிறது. அசாது இந்த அரசின்  முதலாவது பிரதமரான அவர், அந்தமான்  பூமியை இந்தியாவின் விடுதலை பூமியாக மாற்றினார். நேதாஜியின் அழைப்பின் பேரில் அந்தமானின் பல வீரர்கள்  நாட்டின் விடுதலைக்கு தங்கள் இன்னுயிரை ஈந்தனர். இதனையடுத்து ஆசாத் இந்த்  ஃபாஜ் அமைப்பு சுதந்திரத்தின் கொடியை இங்கே பறக்கவிட்டது.

1943 டிசம்பர் 30-ம் தேதியன்று நடைபெற்ற வரலாற்று நிகழ்ச்சிக்கு பிறகு 75 ஆண்டுகள் கடந்துவிட்டன. இந்த நிகழ்வின் நினைவாக நமது குடிமக்களின் நினைவை நிலைத்திருக்கும் வகையில் 150 அடி உயர கொடி மரத்தை இங்கே நாட்டுகிறோம். அதிர்ஷ்டவசமாக சில மாதங்களுக்கு முன் இதே போன்ற வாய்ப்பை  தில்லி செங்கோட்டையில் நான் பெற்றேன். அச்சமயத்தில் ஆசாத் இந்த் ஃபாஜ் 75 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தது.

சகோதரர்களே, சகோதரிகளே,

    வரலாற்று சிறப்புமிக்க இந்த நிகழ்ச்சியின் நினைவாக நாணயமும் தபால் தலையும் வெளியிடப்பட்டுள்ளன. மேலும் நேதாஜி உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீர்ர்களின் நினைவு அந்தமானின் மூலை முடுக்குகளில்லாம் நிலைத்திருப்பதை உறுதி செய்ய
வும் நாடு மொத்தமும் இதிலிருந்து உணர்வு பெறவும் அரசு முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளது. இன்று நான் உங்களிடையே பேசிக் கொண்டு இருக்கும்போது ஒரு அறிவிக்கை வெளியிடப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை உங்கள் முன்னாள் மிகுந்த பெருமையுடன் வெளியிடுகிறேன். இப்போது முதல்  ராஸ் தீவு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றழைக்கப்படும், நீல் தீவு சாஹீத் தீவு என்று அழைக்கப்படும், ஹேவ்லாக் தீவு சுவராஜ் தீவு என்றழைக்கப்படும்

சகோதரர்களே, சகோதரிகளே,

   இந்த தீவுகளிலிருந்துதான் இந்திய தேசியக் கொடியை பறக்கவிட்டு ஆங்கிலேயரின் ஆதிக்கத்திலிருந்து இந்தியா விடுதலை பெற்றது என்று நேதாஜி பிரகடனப்படுத்தினார். இதே மைதானத்தில்தான் இதே நாளில் பெரிய மக்கள் கூட்டத்தில் அவர் உரையாற்றினார்.  இந்த மைதானம் இப்போது நேதாஜி அரங்கம் எனப் பெயர் பெறுகிறது. பின்னர் அவர் கூறினார், இந்தப் பகுதியை பிடித்துக் கொண்டதன் மூலம் இந்திய இடைக்கால அரசு சாத்தியப்பட்டுள்ளது என்று.   இந்த கூற்றுக்குப் பின் நான்கு ஆண்டுகள் கழித்து அன்னை பாரதம் அடிமைத்தளையிலிருந்து விடுதலை பெற்றது.

நண்பர்களே

    நீண்டகால காலனி ஆதிக்கத்தின் போது இந்தியாவின் ஒற்றுமை குறித்து ஐயப்பாடுகளும் கேள்விகளும் எழுப்ப்ப்ட்டு இருந்தால் அவை மனநிலை பற்றியதே தவிர நெறிகள் பற்றியது அல்ல. சுபாஷ் பாபு கூட தொன்று தொட்டே நாம் எல்லோரும் ஒன்று என்று நம்பினார். காலனி ஆதிக்கத்தில் இந்த ஒருமைப்பாட்டை சிதைக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை மறுக்க இயலாது. நேதாஜி உறுதியாக நம்பியது நாம் எல்லோரும் ஒரே நாடு என்பதைத்தான்.   இன்று “ஒரே பாரதம், உன்னத பாரதம்” என்ற பாதையில் நடக்கும் போது நேதாஜியின் உணர்வுப் பாதை வழியாக நாம் முன்னேறுகிறோம் என்ற நினைவு மகிழ்ச்சியளிக்கிறது.

நண்பர்களே

    ஒரு சிலர் அடிக்கடி அறிந்தோ அறியாமலோ முக்கிய  பரப்பு மற்றும் தீவுப்பரப்பு குறித்து பேசுகிறோம். இவை நமது சொல்லகராதியில் இடம் பிடித்துவிட்டன.

  எனதருமை சகோதரர்களே சகோதரிகளே

என்னைப் பொறுத்தவரை மொத்த இந்தியாவும் அதன் ஒவ்வொரு மூலையும் முக்கிய பரப்புதான்.  தில்லி, மும்பை, சென்னை போன்றே போர்ட்ப்ளேரும் முக்கிய பரப்பேயாகும். இந்தக் காரணத்தினால்தான் நமது அரசு இந்தப் பகுதிகளில் சாலை இணைப்புகளுக்கு முக்கிய கவனம் செலுத்தி வருகிறது.  நாட்டின் இயற்பியல் மற்றும் உணர்வுபூர்வ ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதே நமது உறுதிப்பாடாகும்.

சகோதரர்களே சகோதரிகளே

   பண்டைக்காலத்திய நமது வீரர்களை நினைவுபடுத்திக் கொள்ளும் போது ஒருமைப்பாட்டு உணர்வு வலுப்பெறுகிறது.  எந்த நாடு தனது வீரர்கள், தனது வரலாறு, தனது கவுரவம் ஆகியவற்றை ஏற்கத் தவறுகிறதோ அந்த நாடு ஒருபோதும் முன்னேறாது என்று  அடிக்கடி சொல்லி வருகிறேன். எந்த நாடு தமது வரலாறு, பாரம்பரியத்தை பாதுகாக்கிறதோ அதற்கு வலுவான  மேம்பாட்டுப் பாதை காத்திருக்கிறது.

    கடந்த நான்கரை ஆண்டுகளில் நாட்டின் மிகப் பிரகாசமான வரலாற்றின் ஒவ்வொரு சிறு பகுதியையும் மீட்டுக் கொண்டு வர மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. நாட்டு மக்கள் முன்னிலையில் இவற்றை ஊக்கத்தின் ஆதாரமாக காட்டவும் முயற்சி மேற்கொண்டுள்ளது. ஏனெனில் வரலாறு என்பது ஒரு நடைமுறை மட்டுமல்ல அது ஒரு ஆபரணமும் ஆகும். வரலாறு என்பது சென்றுவிட்ட நாள் என்பதோடு நாளைய தினத்தை உண்மையாக்குவதும்கூட.   வரலாறு என்பது உயரம். பலம் மற்றும் வேதனை ஆகியவற்றின் சின்னம் மட்டுமன்றி வீரம் மற்றும் வலுவை உற்சாகப்படுத்தும் காரணியும்கூட.  வரலாறு என்பது நமது கடுமையான உழைப்பின் பிரதிபலிப்பு ஆகும்.  வரலாறு நம்மை எச்சரித்து எப்போதும் உஷாராக இருக்கும்படி கற்பிக்கிறது.

      காலத்தில் கட்டுண்ட வரலாறு  புதிய தீர்மானத்திற்கான  சக்தியும்கூட. வரலாறு புதிய நம்பிக்கை, புதிய கனவுகள் ஆகியவற்றுக்கான ஊக்கத்தைத் தருகிறது.  எதிர்காலத்திற்கு நம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் தைரியத்தையும் அளிக்கிறது.

நண்பர்களே,

இந்தக் கருத்துடன், அரசு பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த காவல்துறை நினைவிட கனவை நனவாக்க நடவடிக்கை எடுத்துள்ளது.  பாபா சாஹேப் பீம்ராவ் அம்பேத்கருக்கு பஞ்ச தீர்த்தத்தை அரசு  அமைத்துள்ளது.  தேசிய ஒற்றுமையின் முன்னோடியும், விவசாயிகள் இயக்கத்தின் தலைவருமான சர்தார் வல்லபாய் படேலின் நினைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் உலகின் மிகப் பெரிய ஒற்றுமை சிலையை நமது அரசு அமைத்துள்ளது. இது குறித்து இன்று நாடே பெருமைப்படுகிறது.  பல்வேறு நினைவிடங்கள் நாட்டின் வரலாற்றை பாதுகாப்பதற்கு மட்டுமின்றி, நாட்டை ஒருமைப்படுத்திய வீர மகன்களுக்கு அஞ்சலி செலுத்தவும் பயன்படுகிறது.

   மேலும், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், சர்தார் வல்லபாய் படேல் நினைவாக தேசிய விருதுகளை அவர்களது பெயர்களில் நாம் அறிவித்துள்ளோம். இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் திறப்பதற்கான  அறிவிப்பை வெளியிடுகிறேன்.

சகோதரர்களே சகோதரிகளே,

   புதிய இந்தியாவை உருவாக்குவதில் முக்கிய மூலக்கூறு மேம்பாடுதான். நமது ஆதாரங்கள் மற்றும் பண்பாடு ஆகியவை ஒரே சமயத்தில் மேம்படுவதை உறுதி செய்ய முயற்சி எடுக்கிறோம்.  நாட்டின் ஒவ்வொரு மூலையும் ஒவ்வொரு நபரும், “அனைவருடன் இணைந்து அனைவருக்கும் மேம்பாடு” என்ற மந்திரத்தின் அடிப்படையில் மேம்பட வேண்டும். ஆதாரங்கள், தொழிலியல் மேம்பாடு ஆகியவை மேம்பாட்டின் முக்கிய பரிமாணங்கள் ஆகும்.

  பிராந்திய நிலைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்த மேம்பாட்டை அடைவதில் அரசு உறுதியுடன் உள்ளது.  சூரியசக்தி, திரவ இயற்கை வாயு, மின்சாரக் கார்கள், போக்குவரத்து அமைப்புகள், ஆகியவற்றின் பயன்பாடு உள்ளிட்ட முயற்சிகள் மேம்பாட்டுக்கும், சுற்றுச்சூழலுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை.

 நண்பர்களே,

  இந்தப் பகுதியில் தொழிலியல் மேம்பாட்டுக்கு பெரிய திட்டம் ஒன்றை அரசு கொண்டு வந்துள்ளது. இந்த வரலாற்று சந்தர்ப்பத்தின் போது இன்று உங்களிடையே இதனை அறிவிக்க விரும்புகிறேன். இந்தத் திட்டம் “லட்சதீப், அந்தமான், நிக்கோபார் தீவுகள், தொழிலியல் மேம்பாட்டுத்திட்டம்” என்று அழைக்கப்படும். இதன்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்களை அமைக்கும் தொழில் முனைவோருக்கு நிதி உதவியையும் சலுகைகளையும் அரசு வழங்கும். இந்தத் திட்டத்தின் உதவியுடன், இந்தப் பகுதியில், எதிர்காலத்தில் பல  தொழிற்சாலைகள் உருவாகி இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தும்.

   சுற்றுலா, உணவுப்பதனீடு, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான ஆயிரக்கணக்கான தொழில்களுக்கு இந்த்த் திட்டம் பயனளிக்கும். தொடக்கநிலை நிறுவனங்களுக்கான கொள்கை புத்தகம் இங்கு இன்று வெளியிடப்பட்டது. இந்த முயற்சிகளினால் இங்குள்ள இளைஞர்கள் பயன் பெற உள்ளனர்.  இந்தப் பகுதியின் அடையாளத்தையும். பண்பாட்டையும் பாதுகாக்கும் வகையில் சுற்றுலா மேம்பாட்டுக்குமுயற்சி எடுக்கப்படுகிறது. இன்று சுற்றுலா அடிப்படை வசதி தொடர்பான பல திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. ஹேவ்லாக் துறைமுகத்தில் அமைக்கப்பட உள்ள  பயணியர் முனையம் உயர்நிலை சுற்றுலாவை வளர்க்கும் சாத்தியக்கூறு கொண்டது. மெரீனா துறை விரிவாக்கமும் இந்தத் திறன் கொண்டதுதான்.  இந்தத் திட்டத்தை இருபது கஜ தூரத்திற்கு பதிலாக 100 கஜ தூரத்திற்கு விரிவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

நண்பர்களே

    தொழில்களும் சுற்றுலாவும் போக்குவரத்து வசதி நன்றாக இருந்தால்தான் மேம்பாடு அடையும். இந்த ஆண்டு இந்த இடத்திற்கான இணைப்பை வலுப்படுத்த நான்கு கப்பல்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  மேலும் இந்தியாவில்தயாரிப்போம் திட்டத்தின்கீழ் கொச்சி கப்பல் கட்டும் துறையில் நான்கு கப்பல்கள் விரைவாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த தீவுகளை மென்மேலும்  தற்சார்புடையவையாக மாற்ற முயற்சி மேற்கொண்டுள்ளோம். நாட்டின் இதர பகுதிகளில் இன்று பெரிய கப்பல்கள் பராமரிக்கப்படுகின்றன. தற்போது போர்ட்ப்ளேர் கப்பல் துறையும் விரிவாக்கப்பட்டு வருகிறது.

நண்பர்களே,

சாத்தாமில் இருந்து பாம்பூபிளாட்-ற்கு பயணம் செல்வதற்கு அதிக நேரம் பிடிக்கும் என்று எனக்கு தெரிவித்தார்கள். இப்போது இந்த இரு இடங்களுக்கும் இடையில் ஒரு பாலம் கட்டுவதற்கு ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. உள்ளூர் பிரதிநிதிகளுடன் இன்று நடைபெற்ற கூட்டத்தில், சாலைகள் குறித்த பிரச்சினை எழுப்பப்பட்டது. இங்கு கிராமப்புறப் பகுதிகளில் சாலைகளைப் பழுதுபார்த்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவை பிரச்சினையாக உள்ளதாக என்னிடம் தெரிவித்தார்கள். சாலைகளின் நிலை குறித்து ஆய்வு செய்து மதிப்பீடு செய்ய வேண்டும் என்று துணைநிலை ஆளுநரை கேட்டுக் கொள்கிறேன். இரண்டு வாரங்களுக்குள் மத்திய அரசுக்கு அறிக்கையை அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையைப் பார்த்த பிறகு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும்.

அத்துடன் விமானப் போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்துவதற்கு, வீரசவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தில் புதிய ஒருங்கிணைந்த முனையம் அமைக்கப்படுகிறது. இந்தப் பணி மிக விரைவில் நிறைவடையும். போர்பிளேரில் இருந்து சென்னை மற்றும் கொல்கத்தாவுக்கு மானியக் கட்டணத்தில் உங்களுக்கு விமானப் போக்குவரத்து வசதி கிடைக்கும்.

நண்பர்களே,

நீர்வழித் தடங்கள், வான்வழித் தடங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்துகளுடன் ஐ-பாதைகளும் மிகவும் முக்கியமானது. தொலைபேசி மற்றும் இன்டர்நெட் தொடர்பு வசதிகளும் மேம்படுத்தப்படுகின்றன. சென்னையில் இருந்து போர்ட்பிளேருக்கு வரும் கடலடி பைபர் ஆப்டிக் கேபிள் மூலம், டெல்லி மற்றும் சென்னை போன்ற நகரங்களில் உள்ளதைப் போன்ற தரமான இன்டர்நெட் வசதி போர்ட்பிளேரிலும் கிடைக்கும்.

சொல்லப்போனால், SWAN (State Wide Area Network) என்ற திட்டமும் இன்று தொடங்கப் பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் பெரிய தீவுகளில் 12 இடங்கள், மக்கள் வாழும் பகுதிகள் முதலாவது கட்டத்தில் இணைக்கப்படும். மாவட்டங்கள் மற்றும் ஒன்றிய அளவில் உள்ள அரசு அதிகாரிகளுக்கு அதிவேக இன்டர்நெட் வசதி இதன் மூலம் கிடைக்கும். இதனால் அரசின் சேவைகளை ஆன்லைன் மூலமாக அளிப்பது சாத்தியமாகும். அந்த வகையில், அந்தமான் மற்றும் நிகோபருடன் நிறைய தீவுகளில் டிஜிட்டல் இந்தியா முயற்சியும் இதன் மூலம் ஊக்கம் பெறும்.

நண்பர்களே,

இளைஞர்களுக்கு தங்களுடைய பாரம்பரிய தொழிலில் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் 19 மீனவர் தரையிறங்கும் மையங்கள் உருவாக்கப் படுகின்றன. புதிய தொழில்கள் மற்றும் சுற்றுலாத் துறையில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகவும் இது உதவும். 9 இடங்களில் பணிகள் ஏற்கெனவே முடிந்துவிட்டன. மீதி இடங்களில் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வேளாண்மை, மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறைகளை ஊக்குவிப்பதற்கு ரூ.200 கோடி நிதி உதவியும் அளிக்கப் படுகிறது.

சகோதர சகோதரிகளே,

இன்றைக்கு முக்கிய திட்டங்கள் தொடங்கப் பட்டுள்ளன. மின்சாரம் மற்றும் தண்ணீர் வசதி தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டங்களுக்கு அடிக்கல்கள் நாட்டப் பட்டுள்ளன. தானிக்கரி அணையின் நீர்மட்டம் உயர்த்தப் படுகிறது. போர்ட் பிளேர் மற்றும் அருகில் உள்ள பகுதிகளுக்கு, குறைந்தபட்சம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இது உதவும்.

மின்சாரத்தைப் பொருத்த வரையில், 7 மெகாவாட் அளவுக்கான சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க கடந்த 6 மாதங்களில் ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. அத்துடன், இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எல்.என்.ஜி. மின் உற்பத்தி நிலையம் மூலமாக அடுத்த 25 ஆண்டுகளுக்கான மின்சாரத் தேவை பூர்த்தி செய்யப்படும்.

கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தில் போர்ட் பிளேர் முக்கியப் பங்காற்றி வருகிறது. இங்கே அமைக்கப்படும் புதிய பிளாஸ்மா எரிவாயுத் திட்டம், சுத்தமான குடிநீரை வழங்குவதுடன், சுத்தமான எரிசக்தி மற்றும் பசுமை எரிபொருளையும் வழங்குவதாக இருக்கும்.

சகோதர, சகோதரிகளே,

தூய்மைக்கான உங்களுடைய உறுதி பாராட்டுக்குரியது! அதற்காக இந்த மக்களை நான் பாராட்டுகிறேன். திறந்தவெளி கழிப்பிடம் இல்லாததாக இந்தத் தீவுகளின் தொகுப்பை மக்கள் அறிவித்திருப்பதை அறிவதில் உண்மையிலேயே நான் மகிழ்ச்சி அடைகிறேன். தூய்மையாக இருப்பது சுற்றுப்புறத்தின் அழகை மேம்படுத்துவதுடன் மட்டுமின்றி, மக்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

சகோதர சகோதரிகளே,

நாட்டு மக்களுக்கு சுகாதார வசதிகள் கிடைக்கச் செய்வதற்கு எங்கள் அரசு முன்னுரிமை அளிக்கிறது. நீங்களும்கூட அதனால் பலன் பெறுவீர்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, போர்ட் பிளேரில் அந்தமான் நிகோபர் தீவு மருத்துவ அறிவியல் நிலையம் தொடங்கப்பட்டது. 2500 ஏழை மற்றும் ஓய்வுபெற்ற மக்கள் அரசின் அந்தமான் நிகோபர் தீவு சுகாதாரக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். அதேபோல ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் இங்குள்ள ஏராளமான ஏழைக் குடும்பத்தினர் பயன் பெறுகின்றனர். மிகவும் தீவிரமான நோய்களுக்கு ரூ.5 லட்சம் வரையில் நவீன வசதிகள் கொண்ட மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் வசதி, இங்கேயும் சாத்தியமாகியுள்ளது.

நண்பர்களே,

இங்கு சுகாதார சேவைகள் விரிவுபடுத்தப் பட்டிருப்பதை அடுத்து இரண்டு PHC-களும், CHC-களும் மாவட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப் படுகின்றன. அத்துடன் ஆயுஷ் மருத்துவமனைக்கும் இன்று அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. இந்த வசதிகள் வந்தபிறகு, சிகிச்சைக்காக நீங்கள் தொலைவில் உள்ள இடங்களுக்குப் பயணம் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.

சகோதர சகோதரிகளே,

சுகாதார வசதிகளுடன் கல்வியிலும் அரசு கவனம் செலுத்துகிறது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, புதிய பட்டவகுப்புக் கல்லூரி தொடங்கப் பட்டது. 2016-ல் புதிய சட்டக் கல்லூரி ஒன்றும் தொடங்கப்பட்டது. இப்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிகர்நிலைப் பல்கலைக்கழக வசதியும் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது. திக்லிபூரில் பாலிடெக்னிக் கல்லூரி திறக்கப்பட்டுள்ளது. சற்று முன்பு நிகோபரில் ஒரு ஐ.டி.ஐ.-யை நான் உங்களுக்காக அர்ப்பணித்து வைத்தேன்.

சகோதர சகோதரிகளே,

நாடு முழுக்க 5 வகையான வளர்ச்சியை உறுதி செய்வதில் இந்த அரசு ஓய்வின்றி, தொடர்ச்சியாக முயற்சிகளை எடுத்து வருகிறது. குழந்தைகளுக்குக் கல்வி, இளைஞர்களுக்கு வருமானம், மூத்தவர்களுக்கு மருந்துகள், விவசாயிகளுக்குப் பாசனம், மக்களின் குறைகளைத் தீர்த்து வைப்பது என்ற 5 துறைகளில் இந்த வகையில் கவனம் செலுத்தப் படுகிறது. இன்றைக்கு தொடங்கப் பட்டுள்ள மற்றும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களும் இந்த எண்ணத்துடன் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் தான்.

பெருமைக்குரிய நமது வரலாறு, கலாச்சாரம் மற்றும் முன்னோடிகள் தங்களுடைய வீரம் மற்றும் தியாகங்களுக்காக கவுரவிக்கப்படுவதை உறுதி செய்வதிலும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்ச்சிக்காகவும், உங்கள் வாழ்வை சிறப்பானதாக ஆக்கும் திட்டங்களுக்காகவும், எனது சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மீண்டும் ஒரு முறை நான் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளைய தினம் 2018 ஆம் ஆண்டின் கடைசி நாள். நாளை மறுநாள் 2019 புத்தாண்டின் முதலாவது நாள். புதிய உத்வேகம், உறுதி மற்றும் சக்தி நிறைந்ததாக, அந்தமான் நிகோபர், லட்சத் தீவுகள் மற்றும் ஒட்டுமொத்த நாட்டின் பகுதிகளிலும் அனைத்து மக்களுக்கும் சுகாதார வசதிகள் கிடைக்கும் வகையில் புத்தாண்டு அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். உங்களுடைய செல்போன்களை எடுத்து, பிளாஷ் ஆன் செய்து என்னுடன் சத்தமாக கூறுங்கள் என்று மீண்டும் ஒரு முறை உங்களை வலியுறுத்தி கேட்டுக்கொள்ள நான் விரும்புகிறேன்....

சுயராஜ்ஜியத்துக்கு சுபாஷ்பாபு அஸ்திவாரமிட்ட இடத்தில், 75வது ஆண்டு நினைவு சமயத்தில் `சுயராஜ்' என்ற உறுதியுடன் வலுவான பயணத்தைத் தொடங்குவதற்கு நாம் உறுதி ஏற்கிறோம். செல்போன்களில் பிளாஷ் லைட்களை ஆன் செய்து உங்களின் பலம் அனைத்தையும் திரட்டி என்னுடன் உரக்கக் கூறுங்கள்...

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

வந்தே மாதரம்!

மிக்க நன்றி.

******


(வெளியீட்டு அடையாள எண்: 1561873) வருகையாளர் எண்ணிக்கை : 519
இந்த வெளியீட்டை படிக்க: Assamese , English , Urdu , हिन्दी , Marathi , Bengali