பிரதமர் அலுவலகம்

மும்பையில் இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியகத்தை பிரதமர் நாளை திறந்து வைக்கிறார்

Posted On: 18 JAN 2019 7:12PM by PIB Chennai

மும்பையில் இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியகத்தின் புதிய கட்டடத்தை பிரதமர் திரு. நரேந்திர மோடி, நாளை (ஜனவரி 19, 2019) திறந்து வைக்கிறார்.  தேசிய அருங்காட்சியத்தை பார்வையிடும் பிரதமர், அங்கு உரையாற்றுகிறார்.

      இந்திய திரைப்படத் துறையின் செழுமைமிக்க வரலாற்றை பறைசாற்றும் விதமாக அமைக்கப்பட்டுள்ள இந்திய திரைப்பட தேசிய அருங்காட்சியகம், திரைப்பட பரிணாம வளர்ச்சி மூலம் எடுத்துரைக்கப்பட்ட இந்தியாவின் சமூக – கலாச்சார வரலாற்றையும் சித்தரிப்பதாக உள்ளது. இந்த அருங்காட்சியகத்தை பார்வையிடும் பார்வையாளர்கள், இந்திய திரைப்படத்தின் நூற்றாண்டு கால பயணத்தை, பல்வேறு காட்சிகள் மற்றும் கிராஃபிக்ஸ், திரைப்படத் துணுக்குகள், கலைப் பொருட்கள், விளம்பரப் பொருட்கள், கலந்துரையாடல் கண்காட்சி போன்றவற்றின் மூலம் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

      தெற்கு மும்பையில் இந்திய திரைப்படப் பிரிவு வளாகத்தில், வரலாற்றுச் சிறப்புமிக்க குல்ஷன் மகால் மற்றும் புதிய அருங்காட்சியக கட்டடம் ஆகிய பரந்து விரிந்த இரண்டு கட்டடங்களில் இந்த அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

      புதிய அருங்காட்சியகக் கட்டடம் நான்கு தளங்களைக் கொண்டது: தளம் 1 – காந்தி & திரைப்படம்,

தளம் 2 - குழந்தைகள் திரைப்பட அரங்கம்

தளம் 3 – தொழில்நுட்பம், படைப்பாற்றல் மற்றும் இந்தியத் திரைப்படம்

தளம் 4 – ஒட்டுமொத்த இந்தியத் திரைப்படங்கள்.

      புதிய அருங்காட்சியகக் கட்டடத்தில் இரண்டு கலையரங்குகள், அதிநவீன டிஜிட்டல் திரைப்பட புரொஜக்டர்கள் மற்றும் 7.1 ஒலிக்கருவி வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. 

***************



(Release ID: 1560654) Visitor Counter : 128