வெளியுறவுத்துறை அமைச்சகம்

இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே விசா ஏற்பாடுகளை எளிதாக்குதல் குறித்து ஏற்கனவே கையெழுத்தான ஒப்பந்ததத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 16 JAN 2019 3:59PM by PIB Chennai

இந்தியா மற்றும் மாலத்தீவு இடையே 2018 டிசம்பரில் கையெழுத்திடப்பட்ட விசா ஏற்பாடுகளை எளிதாக்குதல் குறித்த ஒப்பந்ததத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மாலத்தீவு அதிபர் இந்தியாவிற்கு வருகை தந்த போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியது. சுற்றுலா, மருத்துவம், கல்வி, வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பு சம்பந்தமாக மாலத்தீவு மக்கள் இந்தியாவிற்கு வருவதற்கும், இந்திய மக்கள் மாலத்தீவிற்கு செல்லவும் இந்த ஒப்பந்தம் ஊக்கம் அளிக்கும்.  இந்த ஒப்பந்தம் மூலம், சுற்றுலா, மருத்துவம் மற்றும் வரையறுக்கப்பட்ட வணிகம் ஆகியவற்றிற்கு 90 நாட்களுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். அதேபோல், இந்த இலவச விசா மூலம் அடுத்த நாட்டிற்கு செல்வோர், அதனை எளிதாக மருத்துவ விசாவாக மாற்ற முடியும். அதேபோல், மாவர்களை சார்ந்தவர்கள் மற்றும் வேலைவாய்ப்பிற்காக செல்வோரும் இலவச விசாவினை எளிதில், விசாவாக மாற்றிக்கொள்ள முடியும்.

 

******

 



(Release ID: 1560176) Visitor Counter : 206


Read this release in: English , Telugu , Kannada