மத்திய அமைச்சரவை

மத்திய பல்கலைக்கழக சட்டம், 2009-ன் படி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, பீகார், குஜராத், ஹரியானா, இமாசலப்பிரதேசம், ஜம்மு & காஷ்மீர் (இரண்டு) மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் உள்ள 13 புதிய மத்திய பல்கலைக்கழகங்களின் திருத்தப்பட்ட செலவு மதிப்பீடுகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

Posted On: 16 JAN 2019 4:05PM by PIB Chennai

    பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 13 புதிய மத்திய பல்கலைக்கழகங்களின் தொடர் செலவீனம் மற்றும் அந்த வளாகங்களுக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, ரூ.3,639.32 கோடி செலவினத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்தப் பணிகள் 36 மாதங்களுக்குள் நிறைவேற்றி முடிக்கப்படும்.

   இது தவிர, இந்த மத்திய பல்கலைக்கழகங்களுக்கு ஏற்கனவே அமைச்சரவை ஒப்புதல் அளித்த ரூ.3000 கோடிக்கு மேல், செலவு செய்யப்பட்ட ரூ.1,474.65 கோடிக்கும் பின் ஏற்பு ஒப்புதலை அமைச்சரவை வழங்கியுள்ளது.

புதிய மத்திய பல்லைக்கழகங்கள் வருமாறு:

i. தெற்கு பீகார் மத்திய பல்கலைக்கழகம், கயா, பீகார்

ii. ஹரியானா மத்திய பல்கலைக்கழகம், மகேந்தர்கர்

iii. ஜம்மு மத்திய பல்கலைக்கழகம், ஜம்மு

iv. ஜார்க்கண்ட் மத்திய பல்கலைக்கழகம், ராஞ்சி

v. காஷ்மீர்  மத்திய பல்கலைக்கழகம், ஸ்ரீநகர்

vi. கர்நாடகா மத்திய பல்கலைக்கழகம், குல்பர்கா

 vii. கேரளா மத்திய பல்கலைக்கழகம், காசர்கோடு

viii. ஒரிசா மத்திய பல்கலைக்கழகம், கோராபுட்

ix. பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகம், பட்டின்டா

x. ராஜஸ்தான் மத்திய பல்கலைக்கழகம், பந்தேர்சிந்த்ரி, ராஜஸ்தான்

xi. தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்

 xii. குஜராத் மத்திய பல்கலைக்கழகம், குஜராத்

xiii. இமாச்சலப் பிரதேச மத்திய பல்கலைக்கழகம்

அமைச்சரவையின் இந்த நடவடிக்கை, மாணவர்களுக்கான உயர்கல்வி பயிலும் வாய்ப்பை அதிகரிப்பதுடன், மற்ற பல்கலைக்கழகங்களுக்கு முன் உதாரணமாக திகழ வழிவகை செய்யும். மேலும், கல்வி வசதியில் நிலவும், பிராந்திய சமச்சீர் அற்ற நிலையைக் குறைக்கவும் இது உதவும்.

-----------



(Release ID: 1560170) Visitor Counter : 142