தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

தொலைத் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சாதனைகள் – 2018

Posted On: 09 JAN 2019 12:57PM by PIB Chennai
  • தொலைத்தகவல் தொடர்பு கட்டமைப்பு வசதி மற்றும் சேவைகளுக்கு 2009-14க்கு இடையே ரூ.9,900 கோடியாக இருந்த அரசின் செலவு  2014-19க்கு இடையே (துல்லியமான + திட்டமிட்ட) ரூ.60,000 கோடி என ஆறு மடங்கு அதிகரித்துள்ளது.
  • கட்டணக்குறைப்பு நாடுமுழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு பயன்தந்துள்ளது.
  • 2014 ஜூன் மாதத்தில் நிமிடத்திற்கு சராசரியாக 51 பைசா என்றிருந்த அழைப்புக் கட்டணம் 2018 ஜூன் மாதத்தில் 67 சதவீதம் குறைந்து 11 பைசா ஆகியுள்ளது.
  • 2014-ல் தகவல் பரிமாற்றத்திற்கான கட்டணம் ஒரு ஜீபிக்கு ரூ.269ஆக இருந்தது. 2018 ஜூன் மாதத்தில் இது 96 சதவீதம் குறைந்து ரூ.12ஆகியுள்ளது.
  • பாதுகாப்புத்துறைக்கான அலைக்கற்றை கட்டமைப்பு திட்டத்திற்கு 2012 ஜூலையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால், 2014 மே மாதம் வரை கேபிள் பதிக்கப்படவேயில்லை. கடந்த நான்காண்டுகளில் 51,000 கிலோ மீட்டர் தொலைவுக்கு கண்ணாடி இழை கேபிள் பதிக்கப்பட்டுள்ளது.
  • 2014 ஜூன் மாதத்தில் 75 சதவீதமாக இருந்த தொலைத்தொடர்பு பயன்பாட்டு அளவு 2018 மார்ச் மாதத்தில் 93 சதவீதம் அதிகரித்தது.  புதிய சந்தாதாரர்கள் எண்ணிக்கை 305 மில்லியனாக கூடியது.
  • செல்பேசி வழியாக இணையதள சந்தாதாரர்கள் எண்ணிக்கை இரண்டு மடங்காகியுள்ளது. 2014- மார்ச் மாதத்தில் 233 மில்லியனாக இருந்த எண்ணிக்கை 2018 ஜூன் மாதத்தில் 491 மில்லியனாக அதிகரித்துள்ளது.
  • 2014 ஜூன் மாதத்தில் 251 மில்லியனாக இருந்த இணையதள பயன்பாட்டாளர் எண்ணிக்கை 2018 ஜூன் மாதத்தில் 107 சதவீதம் அதிகரித்து 512 மில்லியன் ஆகியுள்ளது.
  • தொலைத்தொடர்புத் துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. 2015-16-ல் 1.3 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 2017-18-ல் 6.2 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது.
  • இணையதளம் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்வது 4 மடங்கு வளர்ச்சியடைந்துள்ளது. 2016 நவம்பரில் 168 மில்லியனாக இருந்த எண்ணிக்கை தற்போது 600 மில்லியனாக அதிகரித்துள்ளது.
  • இடதுசாரி அதிதீவிரவாதம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முதல் கட்டமாக ரூ.4,781 கோடி ஒதுக்கீட்டில் 2,335 மொபைல் கோபுரங்கள் அமைக்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக ரூ.7,330 கோடி ஒதுக்கீட்டில் 4,072 மொபைல் கோபுரங்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
  • வடகிழக்கு பகுதிகளுக்கான தொலைத்தொடர்பு வசதிக்கு இதுவரை இல்லாத அளவாக ரூ.10,800 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் எல்லைப்புற பகுதிகளுக்கும், நெடுஞ்சாலைகளுக்கும், குக்கிராமங்களுக்கும் தொலைத்தொடர்பு வசதி கிடைக்கும்.
  • ஊரகப்பகுதிகளுக்கும் வை-ஃபை வசதியை விரிவுப்படுத்த ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் பிஎஸ்என்எல் மூலம் ஊரக இணைப்பகங்களில் 25,000 ஹாட்ஸ்பாட்-களும் பொதுசேவை மையங்கள் மூலம் 7,000 ஹாட்ஸ்பாட்-களும் கிடைக்கின்றன. 2019 மார்ச் மாதத்திற்குள் மேலும் கூடுதலாக ஒரு மில்லியன் ஹாட்ஸ்பாட்-களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

2018-க்கான சிறப்பு திட்டங்கள்

  • 2022-க்குள் அனைவருக்கும் அகண்டஅலைவரிசை வசதி
  • இந்தத் துறையில் 4 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்
  • இந்தியாவின் உள்நாட்டு மொத்த உற்பத்தி மதிப்பில் தற்போது 6 சதவீதமாக உள்ள டிஜிட்டல் தகவல் தொடர்பு வளர்ச்சியை 2022-க்குள் 8 சதவீதமாக அதிகரிப்பது.
  • சர்வதேச தொலைத்தொடர்பு சங்கத்தின் வளர்ச்சி குறியீட்டு வரிசையில் தற்போது 134-ஆவது இடத்தில் உள்ள இந்தியாவை 50ஆவது இடத்திற்கு கொண்டுவருவது.
  • உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதி செய்வதன் மூலமும், இறக்குமதியை குறைப்பதன் மூலமும் சர்வதேச வர்த்தகத்தை இந்தத் துறையில் அதிகரிப்பது.
  • நாட்டின் டிஜிட்டல் இறையாண்மையை உறுதி செய்வது

அஞ்சல்துறை சாதனைகள்

  • 2006-14-க்கு இடையே ஆண்டுக்கு ரூ.788 கோடி என்று இருந்த விரைவு அஞ்சல் மூலமான வருவாய் 2014-18 இடையே ஆண்டுக்கு சராசரி வருவாய் ரூ.1,682 கோடி என இருமடங்கு ஆகியுள்ளது.
  • இ-வர்த்தக வருவாய் 2017-18-ல் ரூ.415 கோடியாக இருந்தது. இது இதற்கு முந்தைய நிதியாண்டைவிட 20 சதவீத வளர்ச்சியாகும்.
  • செல்வமகள் சேமிப்பு திட்டத்தின்கீழ், மொத்தம் 1.52 கோடி பதிவுகள் செய்யப்பட்டதில், அஞ்சல் அலுவலகங்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 1.31 கோடியாகும்.
  • ஆதார் அட்டை பதிவு மற்றும் தகவல் இணைக்கும் மையங்கள் தற்போது வரை 13,352 அஞ்சலகங்களில் செயல்படுத்தப்படுகின்றன. இந்த மையங்களில் 8 லட்சத்திற்கும் அதிகமான பதிவுகளும், 29 லட்சம் தகவல் இணைப்புகளும் செய்யப்பட்டுள்ளன.
  • நாடுமுழுவதும் உள்ள 2,529 கிராமங்களில், சம்பூர்ணபீமா கிராம் யோஜனா-வின் கீழ் குறைந்தபட்சம் ஒரு வீட்டில் ஒருவருக்கு காப்பீடு என்ற திட்டம் அமலாக்கப்படுகிறது. 2019 மார்ச் மாதத்திற்குள் 10,000 கிராமங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • மக்கள் உணர்வுகளை மையப்படுத்திய தலைப்புகளில் அஞ்சல் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. ராமாயணம், மகாபாரதம், இந்திய உணவு வகைகள், சூரியக் குடும்பம், சஃப்தர்ஜங் மருத்துவமனை போன்றவற்றை சித்தரிக்கும் அஞ்சல்தலைகள் அண்மையில் வெளியிடப்பட்டன.
  •  அஞ்சல் துறையில் 2010-14-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில், ரூ.434 கோடியாக இருந்த தொழில்நுட்பத்திற்கான முதலீடுகள் 2014-18-க்கு இடைப்பட்ட ஆண்டுகளில் (செப்டம்பர் 2010 வரை) ரூ.1,087 கோடியாக அதிகரித்துள்ளது.
  • மகாத்மாகாந்தியின் 150ஆவது பிறந்தநாள் கொண்டாட்டங்களையொட்டி வட்டவடிவ அஞ்சல்தலையை அக்டோபர் 2, 2018 அன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டார். சுதந்திர இந்திய வரலாற்றில் வட்டவடிவில் அஞ்சல்தலைகள் வெளியிடப்படுவது இதுவே முதன்முறையாகும்.

<><><><><>



(Release ID: 1559340) Visitor Counter : 531


Read this release in: English , Urdu , Bengali