பாதுகாப்பு அமைச்சகம்

2018 சாதனைகள்: பாதுகாப்பு அமைச்சகம்

Posted On: 31 DEC 2018 4:20PM by PIB Chennai

இந்த ஆண்டு பாதுகாப்பு அமைச்சகம் பல நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது. மத்திய அரசு உத்தரப் பிரதேசத்திலும், தமிழகத்திலும் தலா ஒரு பாதுகாப்பு உற்பத்திக் கூடங்களை (Defence Production Corridors) அமைக்க கொள்கை முடிவு எடுத்துள்ளது. இதுஇந்தியாவில் தயாரி” (Make in India) என்ற முன்முயற்சிகளின் அடிப்படையில் இந்தியாவின் பாதுகாப்பு தற்சார்பு நிலைக்குத் துணை புரியும். மேலும், 2018ம் ஆண்டு நாட்டில் மகளிருக்கு அதிகாரமளிக்கும் முயற்சியில் குறிப்பிடத் தக்க மைல் கல்லாகும். முழுக்க முழுக்க பெண்களே இயக்கும் வகையிலான, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட 56 அடி நீளமுள்ளஐஎன்எஸ்வி தாரிணி‘ (INSV Tarini) என்ற கடற்படைக் கப்பல் அறிமுகம் செய்யப்பட்டது.

பாதுகாப்புத் துறையின் 10வது கண்காட்சி சென்னையில் ஏப்ரல் 11ம் தேதி முதல் 14ம் தேதி வரையில் வெற்றிகரமாக நடைபெற்றது. மாநாட்டை பிரதமர் ஏப்ரல் 12ம் தேதி திறந்துவைத்தார். அதன் முழக்கம்இந்தியா: வளர்ந்து வரும் பாதுகாப்பு உற்பத்தி மையம் ' (India: The Emerging Defence Manufacturing Hub) ஆகும்.

வானில் பறந்தபடியே ஒரு விமானத்திலிருந்து இன்னொரு விமானத்திற்கு எரிபொருள் நிரப்பும் முறையைக் கடைப்பிடிக்கும் நாடாக இந்தியா உருவாகியுள்ளது. அதன்படி, 2018, செப்டம்பர் 10ம் தேதி  இந்திய விமானப் படையின் IAF IL78 போர் விமானத்திலிருந்து தேஜஸ் விமானத்துக்கு விண்ணில் பறந்தபடியே 1,900 கிலோகிராம் எரிபொருள் நிரப்பப்பட்டது. “பாதுகாப்பு அறிவாற்றல் இயக்கம்” (Mission Raksha Gyan Shakti) என்ற இயக்கத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் கடந்த 2018, நவம்பர் 27ம் தேதி தொடங்கிவைத்தார்.

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜோத்பூரில் உள்ள விமானப்படை நிலையத்தில் 2018, செப்டம்பர் 28ம் தேதி நடைபெற்ற கூட்டு கமாண்டர்களின் மாநாட்டில் கலந்துகொண்டுபாராக்ரம் பர்வ்’ (Parakram Parv) என்ற கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். முப்படைகளின் துணைத் தலைவர்களுக்கு நிதி அதிகாரத்தை ஐந்து மடங்காக பாதுகாப்பு அமைச்சகம் உயர்த்தியது. இதன் மூலம் அவர்கள் ரூ. 500 கோடி அளவுக்கு ஆயுதக் கொள்முதல் குறித்த முடிவை எடுக்கலாம்.

 

சென்னை, ஆவடியில் உள்ள ஆயுதத் தொழிற்சாலை முழுக்க முழுக்க உள்நாட்டுத் தயாரிப்பாக டி-90 பீஷ்மா டாங்கிக்கு (T-90 Bhisma Tank) 1000 எச்பி திறன்கொண்ட என்ஜின் (1000 HP engine V92S2 engine) மற்றும் டி- 72 அஜேயா டாங்கிக்கு (T-72 Ajeya Tank) வி-46-6 திறனுள்ள என்ஜினையும் (V-46-6 engine) வெற்றிகரமாக வடிவமைத்துள்ளது. இந்த என்ஜின்கள் இதுவரை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் அடுத்து 10 ஆண்டுகளுக்குச் செலவாக இருந்த ரூ. 800 கோடி மிச்சப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன்இந்தியா பாதுகாப்பு சவாலை எதிர்கொள்வோம்” (Defence India Startup Challenge) என்ற திட்டத்தை 2018, ஆகஸ்ட் 4ம் தேதி தொடங்கிவைத்தார். இது பாதுகாப்புத் துறையின் தேவைகளை நாமே நிறைவு செய்து கொள்ள உதவும் முறையாகும்.

மேலும் விவரங்களுக்கு இணையதளம் : http://pib.nic.in/

 

----------------

 



(Release ID: 1558828) Visitor Counter : 281


Read this release in: English , Bengali