நிலக்கரி அமைச்சகம்
2018 சாதனைகள்: நிலக்கரித் துறை அமைச்சகம்
Posted On:
31 DEC 2018 1:23PM by PIB Chennai
- கடந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் வரையிலான காலத்தில் 394.910 மெட்ரிக் டன்னாக இருந்த நாட்டின் நிலக்கரி உற்பத்தி, 2018-19-ல் 433.896 மில்லியன் டன்னாக உள்ளது.
- 2018 ஏப்ரல்-நவம்பர் வரையிலான காலத்தில் ஒட்டுமொத்த நிலக்கரி உற்பத்தியின் வளர்ச்சி 9.8% ஆகும்.
எரிசக்தி துறையுடன் இணைப்புள்ள கொள்கை – சக்தி
பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு 17.05.2017 அன்று தற்போதுள்ள உத்தரவாத கடிதம்-எரிபொருள் வழங்கல் ஒப்பந்தம் (எல்.ஓ.ஏ.-எப்.எஸ்.ஏ.) நடைமுறையினை அகற்றிட ஒப்புதல் அளித்ததுடன், 22.05.2017 அன்று நிலக்கரி அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட இந்தியாவில் வெளிப்படையான நிலக்கரி ஒதுக்கீடுத் திட்டம், (சக்தி) 2017-ஐ அறிமுகப்படுத்தியது.
ஒழுங்குபடுத்தப்படாத துறையுடனான இணைப்புகளை ஏலம் விடுதல்
15.02.2016 அன்று ஒழுங்குப்படுத்தப்படாத துறையுடனான தொடர்புகளை ஏலம் விடுவதற்கான கொள்கை வெளியிடப்பட்டது. சிமெண்ட், எஃகு/இலகு இரும்பு, அலுமினியம் மற்றும் பிற பொருட்களின் (உரம் (யூரியா) துறை தவிர), மத்திய பொது கொள்முதல்கள் உள்ளிட்டவை, போன்ற ஒழுங்குப்படுத்தப்படாத துறைக்கான தொடர்புகள்/உத்தரவாத கடிதங்களின் (எல்.ஓ.ஏக்கள்) அனைத்து ஒதுக்கீடுகளும் ஏலத்தின் அடிப்படையில் அமையும்.
- நிலக்கரி இணைப்புக்கான பகுப்பாய்வு
வழங்கப்பட்டுள்ள தொழில்நுட்ப வரம்பிற்குள்ளாக போக்குவரத்து செலவினம் மற்றும் பொருளாக்கத்தை மேம்படுத்தும் நோக்குடன் தற்போதுள்ள நிலக்கரி ஆதாரங்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்வதற்காக 2014, ஜுன் மாதம் உள்-அமைச்சக பணிக் குழு (ஐ.எம்.டி.எப்.) அமைக்கப்பட்டது.
08.02.2016 அன்று, நிலக்கரி சுரங்கங்கள்/தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மத்திய மற்றும் மாநில பொதுத் துறை நிறுவனங்களின் இறுதி-பயன் ஆலைகளுக்கான ‘இடைவெளி இணைப்பு’ நிதிக் கொள்கை வெளியிடப்பட்டது.
- மூன்றாம் தரப்பு மாதிரிகள்
இறுதியான ஏற்றுதல் நிலையில், மூன்றாம் தரப்பு மாதிரிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் – நிலையான இயக்க நடைமுறைகள் 26.11.2015 அன்று வெளியிடப்பட்டது.
- 2018-19 நிதியாண்டில் முதலீட்டை குறைத்தல்
கோல் இந்தியா விற்பனை செய்தல் (ஓ.எப்.எஸ்) : கோல் இந்தியா நிறுவன மூலதன தொகையில் 10%-ஐ குறைத்திட பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு 2015-ல் ஒப்புதல் அளித்தது. அதில், 2018-19-ஆம் நிதியாண்டில், 3.19% பங்குகளை, விற்பனை செய்தல் முறையின் (ஓ.எப்.எஸ்) மூலமாக முதலீடு குறைக்கப்பட்டது.
- பாரத் 22 வர்த்தக பரிமாற்ற நிதி (இ.டி.எப்).: பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அதிகாரமளித்ததையடுத்து, மாற்று வழிமுறை, பாரத் 22 இ.டி.எப். என்ற புதிய வர்த்தக பரிமாற்ற நிதியை உருவாக்கிட ஒப்புதல் அளித்தது.
- என்.எல்.சி.ஐ.எல்.-ன் திரும்ப பெறுதல் : நடப்பாண்டான 2018-19-ல், ஒவ்வொன்றும் ரூ.10 மதிப்பிலான 14,19,31,818 மூலதனப் பங்குகளை ஒரு பங்கு ரூ.88/- என்ற வீதத்தில் திரும்ப பெற்றுக் கொள்வதற்கு என்.எல்.சி.ஐ.எல்-ன் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
- சி.பி.எஸ்.இ. வர்த்தக பரிமாற்ற நிதி (இ.டி.எப்).: 2013, மே, 2 அன்று, பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, பட்டியலிடப்பட்ட மத்திய பொதுத் துறை நிறுவனங்களின் மூலதனப் பங்குகளை உள்ளடக்கிய சி.பி.எஸ்.இ.-இ.டி.எப்.-ஐ அமைப்பதற்கான ஒப்புதலை அளித்தது.
- நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு பிரிவுகள்) சட்டம், 2015-ன் கீழ் நிலக்கரி தொகுதிகள்/சுரங்கங்கள் ஒதுக்கீடு
நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு பிரிவுகள்) சட்டம், 2015-ன்படியும் மற்றும் அதன் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளின்படியும், இதுவரை 85 நிலக்கரி சுரங்கங்கள் வெற்றிகரமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த 85 நிலக்கரி சுரங்கங்களில், 25 சுரங்கங்கள் (24 தனியார் நிறுவனங்களுக்கும் மற்றும் 1 அரசு நிறுவனத்திற்கு) மின்ணணு ஏலம் மூலமாகவும் மற்றும் 60 சுரங்கங்கள் அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு முறை மூலமாகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு பிரிவுகள்) சட்டம், 2015-ன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி தொகுதிகள்/சுரங்கங்களை செயலாக்குதல்
- 2018-ம் ஆண்டில், 6 நிலக்கரி சுரங்கங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
- அரதாகிராம்
- மனோஹர்பூர்
- கரே பால்மா IV/8
- தலாய்பள்ளி
- துலங்கா
- பச்வாரா வடக்கு
நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்டங்களின் நிலை
- கோல் இந்தியா நிறுவன செயல்பாட்டின் கீழ் ரூ. 20 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான 117 சுரங்கத் திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த 117 திட்டங்களில், 63 திட்டங்கள் (54%) குறிப்பிட்ட காலத்தின்படியும் மற்றும் 54 திட்டங்கள் (46%) தாமதமாகவும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
புதிய திட்டங்கள்
- 2017-18-ம் ஆண்டு காலத்தில், கோல் இந்தியா நிறுவனம், ஆண்டுதோறும் மொத்தமாக 24.85 மெட்ரிக் டன் கிடைக்கக்கூடிய திறன்கொண்ட பூமியிலிருந்து நேரடியாக நிலக்கரி எடுக்கும் (ஓப்பன்காஸ்ட்) 5 திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்ததுடன், மூலதனமாக ரூ.4264.90 கோடிக்கும் அனுமதியளித்துள்ளது.
.
நிலக்கரியை கொண்டு செல்வதற்கான ரயில் உள்கட்டமைப்பு
- ஜார்காண்டில் உள்ள வடக்கு கரன்பூரா, ஒடிசாவில் உள்ள ஐ.பீ.-வேலி மற்றும் சட்டீஸ்கரில் உள்ள மாண்ட்-ராய்கார் ஆகிய மூன்று வளஆதாரமிக்க நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரியை கொண்டு செல்வதில் உள்ள பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், இந்திய அரசு, ஜார்காண்ட், வடக்கு கரன்பூராவில் தோரி-ஷிவ்பூர்-கடடோடியா, ஒடிசா, ஐ.பீ.வேலியில் ஜார்சுகுடா-பார்பள்ளி-சர்தேகா, சத்தீஸ்கரில் பூப்தியோபூர்-கோரிசப்பார்-தரம்ஜெய்கர்ஹ் ஆகிய 3 ரயில்வே திட்டங்களை செயல்படுத்த உள்ளது.
- நிலக்கரி கொண்டுள்ள பகுதிகள் (கையகப்படுத்துதல் & வளர்ச்சி) சட்டம், 1957-ன் கீழ் நிலம் கையகப்படுத்துதல் :
01.04.2018 முதல் நாளது தேதி வரையிலும், நிலக்கரி கொண்டுள்ள பகுதிகள் (கையகப்படுத்துதல் & வளர்ச்சி) சட்டம், 1957-ன் (சி.பீ.ஏ.(ஏ&டீ) சட்டம், 1957) கீழ் மொத்தம் 2824.97 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன.
சர்வதேச ஒத்துழைப்பு
மத்திய சுரங்கம் திட்டமிடல் & வடிவமைப்பு நிறுவன லிமிடெட் (சி.எம்.பி.டீ.ஐ.) மற்றும் ஆஸ்திரேலியா, காமன்வெல்த் அறிவியில் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி அமைப்பு ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு உடன்படிக்கை 16.11.2018 அன்று கையெழுத்தானது.
*********
(Release ID: 1558561)
Visitor Counter : 300