நிதி அமைச்சகம்

2018 சாதனைகள்: – மத்திய நிதி அமைச்சகம்

Posted On: 02 JAN 2019 12:41PM by PIB Chennai

குடிமக்களின் நலன், ஒட்டுமொத்த கட்டமைப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகிய விஷயங்களில் புதிய உச்சங்களுக்கு இந்தியாவை அழைத்துச் செல்வதிலும், உலக சக்தியாக உருவாவதற்கான வலுவான அறிகுறிகளை உருவாக்குவதிலும் இந்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது.

இத்தகைய சாதனைகளை நிகழ்த்துவதற்கு துணிவான, முக்கியமான பல சமூக-பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ள அரசு தீவிரமாகச் செயல்பட்டு வந்தது. அரசு தனது சீர்திருத்த முயற்சிகளை புறமொதுக்கப்பட்ட, இதுவரையில் சமூகரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான செயல்முறையில் உள்ளே கொண்டுவருவதென்ற உணர்வுடன் மேற்கொண்டது. இவ்வகையில் தன் ஆட்சிக் காலத்தின் துவக்க நிலையிலேயே அரசு 2014 ஆகஸ்ட் மாதத்தில் புறக்கணிக்கப்பட்ட வகுப்பினரை முறைப்படுத்தப்பட்ட வங்கி அமைப்புக்குள் கொண்டு வருவதற்கான வாய்ப்பை வழங்கவும், நிதிசார் அமைப்பிற்குள் அவர்களை கொண்டுவருவதையே தனது முக்கிய இலக்காக எடுத்துக் கொண்டும் பிரதமர் ஜன் தன் திட்டத்தைக் கொண்டு வந்தது. இத்திட்டத்தின் வெற்றியானது நாட்டில் அதிகம் தேவைப்பட்டு வந்த நிதிசார் கட்டமைப்பை உருவாக்க வழிவகுத்ததோடு, அடல் ஓய்வூதியத் திட்டம், பிரதமர் ஆயுள் பாதுகாப்புத் திட்டம், பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் போன்ற சமூகப் பாதுகாப்பு திட்டங்களை கொண்டுவருவதற்கான பாதையாகவும் மாறியது.

பல்வேறு முன்முயற்சிகளின் மூலம் தலையெடுத்து வந்த தொழில்முனைவர்களிலிருந்து தொடங்கி கடுமையாக உழைக்கும் விவசாயிகள் வரையிலான மக்களின் நிதித் தேவைகளை நிறைவேற்றவும் முடிந்தது. இவ்வகையில் மிகவும் முக்கியமான முன்முயற்சி என்பது பிரதமர் தொழில் திட்டம் ஆகும்.

ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம், தூய்மையான பணத்திற்கான நடவடிக்கை, திவால் மற்றும் தொழில்நொடிப்பு ஆகியவற்றுக்கான விதிமுறைகள் ஆகிய சீர்திருத்தங்களுக்கான முன்முயற்சிகள் இந்தியப் பொருளாதாரத்தை மேலும் திறமையானதாகவும், வெளிப்படையானதாகவும் ஆக்கியதோடு, விதிமுறைகளுக்கு முறையாகக் கீழ்ப்படிவது மற்றும் நிதி ஒழுங்கு ஆகியவற்றையும் உறுதிப்படுத்தின.

உலகவங்கியின் சமீபத்திய அறிக்கையின்படி, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வர்த்தகம் செய்வதை எளிதாக்குவதில் சிறந்த மேம்பாட்டை எட்டிய நாடாக இந்தியா உருவாகியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இத்துறையில் 142வது இடத்திலிருந்து 77 வது இடத்திற்கு, அதாவது 65 இடங்களைக் கடந்து இந்தியா முன்னேறியுள்ளது. இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு சாதனையே ஆகும்.

 

 

I . பொருளாதார விஷயங்களுக்கான துறை

Ø 2018-19ஆம் ஆண்டில் பொருளாதாரத்தின் ஒட்டுமொத்த அடிப்படை அம்சங்கள் தொடர்ந்து வலுவாக இருந்து வந்துள்ளது

துறைவாரி பொருளாதார அறிகுறிகள்

2018-19-ம் ஆண்டுக்கு

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் (%)

7.1 (இரண்டாவது காலாண்டு வரையில்)

நுகர்வோர் விலை குறியீட்டெண்

3.9% (இரண்டாவது காலாண்டு)

மொத்த விலை குறியீட்டெண்

4.64% (2017 நவம்பர் விலையை விட)

நடப்புக் கணக்கு பற்றாக்குறை

15.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (முதலாவது காலாண்டில்)

வர்த்தகப் பற்றாக்குறை

45.7பில்லியன் அமெரிக்க டாலர்கள் (முதலாவது காலாண்டில்)

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் வெளிநாட்டுக் கடன்களுக்கும் உள்ள விகிதம்(%)

20.5% ( 2018 மார்ச் வரை)

நேரடி அந்நிய முதலீட்டு வரவுகள்

16,868 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஏப்ரல்-ஜூன், 2018)

அந்நியச் செலாவணி கையிருப்பு

393.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள்

(நவம்பர் 30, 2018 நிலவரப்படி)

(ஆதாரம்: ரிசர்வ் வங்கி சுற்றறிக்கை மற்றும் பத்திரிக்கை தகவல் அலுவலக இணைய தளம்)

 

 

Ø ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியும் பொருளாதாரமும்

தற்போதைய உலகச் சூழலில் இந்தியப் பொருளாதாரம் உயர் வளர்ச்சி விகிதத்தை தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது.

உலகத்தில் இந்தியப் பொருளாதாரத்தின் பங்கு என்பது (தற்போதைய அமெரிக்க டாலர்களின் மதிப்பில் உலகத்தின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியின் விகிதம் என்ற வகையில் கணக்கிடப்படுவது) 2014-ம் ஆண்டில் 2.6 சதவீதமாக இருந்தது 2017-ம் ஆண்டில் 3.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. (உலக வளர்ச்சி குறித்த அறிகுறிகளின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்)

(சர்வதேச நாணய நிதியத்தின் 2018 அக்டோபர் மாத புள்ளிவிவரங்களின்படி) இந்திய பொருளாதாரம் 2018-19 மற்றும் 2019-20 ஆண்டுகளில் மிக வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக முன்வைக்கப்படுகிறது.

2017-18-இன் இரண்டாவது காலாண்டில் உற்பத்தி வளர்ச்சி 7.1 சதவீதம் என்ற அடித்தளத்தில் இருந்து 2018-19-இன் இரண்டாவது காலாண்டில் 7.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. கட்டுமானத்துறை 7.8 சதவீதம் வளர்ந்துள்ளது. ஒட்டுமொத்த நிலைத்த முதலீட்டு வளர்ச்சி என்பது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியின் ஒரு பங்கு என்ற வகையில் கடந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டை விட கிட்டத்தட்ட 1.3 சதவீதப் புள்ளிகள் அதிகரித்துள்ளது. இரண்டாவது காலாண்டிற்கான ஏற்றுமதி 13.4 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தக் காலாண்டிற்கான அரசு நுகர்வு என்பதும் குறிப்பிடத்தக்க அளவிற்கு 12.7 சதவீதம் அதிகரித்துள்ளது.

உலகப் பொருளாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளின் அறிக்கைகளாலும் இது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 2018-ம் ஆண்டிற்கான உலக பொருளாதார நிலைமை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிக்கையின்படி, இந்தியாவிற்கான எதிர்பார்ப்பு என்பது துடிப்பான தனிநபர் நுகர்வு, பொதுமுதலீட்டு மற்றும் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் ஆகியவற்றின் விளைவாக பெருமளவிற்கு சாதகமான ஒன்றாகவே தொடர்ந்து இருந்து வருகிறது.

2017-18-ம் ஆண்டில் பணவீக்கம் என்பது சராசரி அளவில் கடந்த ஆறு ஆண்டுகளிலேயே மிகக் குறைவானதாக உள்ளது.

நாட்டில் பணவீக்கம் தொடர்ந்து 2017-18-ம் ஆண்டில் கட்டுக்குள் இருந்து வருகிறாது. நுகர்வோர் விலை குறியீட்டெண் அடிப்படையிலான பணவீக்கம் இக்காலப்பகுதியில் சராசரியாக 3.3 சதவீதமாக, அதாவது கடந்த ஆறு நிதியாண்டுகளிலேயே மிகக் குறைவானதாக, அமைந்திருந்தது.

 

Ø கருப்புப் பணத்தைத் தடுப்பது

இந்தியாவிற்கு வெளியே உள்ள கருப்புப் பணத்தையே அரசு முதலில் குறிவைத்தது. தண்டனை வரியை செலுத்தி விட்டு இந்தப் பணத்தை நாட்டிற்குள் திரும்பக் கொண்டு வருமாறு இத்தகைய சொத்துக்களை வைத்திருந்தோர் அறிவுறுத்தப்பட்டனர். அவ்வாறு செய்யத் தவறியோர் கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

 

வெளிநாட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கருப்புப்பணத்தைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் சாதகமான விளைவுகளை ஏற்படுத்தின

சுவிஸ் வங்கிகளில் இந்தியப் பணம்: சர்வதேச தீர்வுகளுக்கான வங்கியுடன் இணைந்து சுவிஸ் தேசிய வங்கி சேகரித்த புள்ளிவிவரங்கள் வங்கிகளைத் தவிர, சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்த முதலீடு மற்றும் கடன்கள் 2016-ம் ஆண்டினை ஒப்பிடும்போது 2017-ம் ஆண்டில் 34.5 சதவீதம் குறைந்துள்ளது என்பதை தெரிவிக்கின்றன. மேலும் 2013-2017 ஆண்டுகளுக்கு இடையே சுவிட்சர்லாந்து நாட்டில் இந்தியர்களின் முதலீடு மற்றும் வங்கி முறையல்லாத கடன்கள் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவிற்கு 80.2 சதவீதம் குறைந்துள்ளது.

இதுபோன்ற குற்றங்களில் தொடர்புடைய மொத்தத் தொகை ரூ. 100 கோடி அல்லது அதற்கு மேலாக இருப்பின், இது தொடர்புடைய வழக்குகள் இந்த மசோதாவின் கீழ் வரும்.

§ போலி நிறுவனங்கள்

போலி நிறுவனங்கள் என்ற அபாயத்தைக் கட்டுப்படுத்த துடிப்பான, ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை போலி நிறுவனங்கள் குறித்த நடவடிக்கைக் குழு மேற்கொண்டது. தீவிரமான மோசடிகளை விசாரிப்பதற்கென உருவாக்கப்பட்ட அமைப்பினால் இத்தகைய போலி நிறுவனங்கள் பற்றி தொகுக்கப்பட்ட புள்ளிவிவரங்களும் இந்த நடவடிக்கைக் குழுவின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக அமைந்திருந்தது.

Ø சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு ஊக்கம்

சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆதரவு மற்றும் உதவிக்கரம் நீட்டுவதற்கான முன்முயற்சியை பிரதமர் திரு. நரேந்திர மோடி துவங்கி வைத்தார்.

  • சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் எளிதில் கடன் வசதியைப் பெறும் வகையில் 59 நிமிடங்களில் கடன் வசதியை பெற்றுத் தரும் இணைய தளம் செயல்பட்டது.
  • மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் தேவைகளில் 25 சதவீதப் பொருட்களை சிறு,குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களிடமிருந்தே கட்டாயமாக வாங்க வேண்டும் என்ற நிபந்தனை.
  • நிறுவனங்களுக்கான சட்டத்தின் கீழ் சிறிய அளவிலான குற்றங்களுக்கான செயல்பாட்டு முறைகளை எளிமைப்படுத்தும் அவசர சட்டம்.                                                                                                                                                                                                                                

Ø சர்வதேச அளவிலான ஒப்பந்தங்கள் மற்றும் தொடர்புகள்

குறிப்பிடத்தக்க அளவிலான சர்வதேச ஒப்பந்தங்கள் மற்றும் தொடர்புகள் ஆகியவை இந்தியா தனது சர்வதேச இருப்பை அதிகரித்துக் கொள்ளவும் மேம்படுத்திக் கொள்ளவும் உதவியுள்ளன.

இத்தகைய சர்வதேச ஒப்பந்தங்கள், தொடர்புகளில் சில கீழே தரப்படுகின்றன:

  • உலக சுங்க வரி அமைப்பின் ஆசிய-பசிபிக் பகுதிக்கான உதவித் தலைவர் பொறுப்பு இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. ஜூலை 2018 முதல் ஜூன் 2020 வரை இந்தியா இந்தப் பதவியில் இருக்கும்.
  • கட்டமைப்பு முதலீட்டிற்கான ஆசிய வங்கியின் மூன்றாவது வருடாந்திர கூட்டம் இப்பகுதியில் வளத்தையும் பாதுகாப்பையும் அதிகரிப்பதற்கான தனது கடன் வழங்கும் திறனை அதிகரித்துக் கொள்வது என்ற நம்பிக்கையுடன் முடிவடைந்தது. இந்தியாவில் கிராமப்புற தொடர்புகளை மேம்படுத்த  140 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்வதெனவும் இந்த வங்கி முடிவு செய்துள்ளது.

 

 

Ø ஜிஎஸ்டி கவுன்சில்: முக்கிய முடிவுகள்

ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டம்:

சரக்குகள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதம் குறைக்கப்பட்டது

2018 டிசம்பர் 22 அன்று புதுடெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சிலின் 31வது கூட்டத்தில்  ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மற்றும் (சரக்குகள் குறித்த) விளக்கங்கள் ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டு வருவது குறித்து முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. அரசிதழ் வெளியீடு மற்றும் சுற்றறிக்கைகளின் மூலம் இவை நடைமுறையில் உள்ள சட்டமாக அமையும்.

ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுதல்

இதுவரையில் ஜிஎஸ்டி தொகையை திரும்பப் பெறுவதற்காக பெறப்பட்ட கோரிக்கைகளில் ரூ. 97,202 கோடியில் மொத்தம் ரூ. 91,149 கோடிக்கான கோரிக்கைகள் மறைமுக வரி மற்றும் சுங்க வரிகளுக்கான மத்திய கழகத்தினாலும் மாநில அமைப்புகளாலும் தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ. 6,053 கோடிக்கான கோரிக்கைகள் உடனடியாகப் பரிசீலிக்கப்பட்டு தகுதியுள்ளோருக்கு நிவாரணம் வழங்கப்படும். எவ்வித குறைபாடுகளும் இல்லாத கோரிக்கைகள் உடனடியாக கவனிக்கப்படுகின்றன.

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு

Ø மின்னணு முறையிலான ரசீது முறை

2018 ஏப்ரல் முதல் தேதியில் இருந்து மாநிலங்களுக்கு இடையே பொருட்களை எடுத்துச் செல்வதற்கான மின்னணு முறையிலான ரசீது முறை நாடு முழுவதிலும் அறிமுகப்படுத்தப்பட்டது. மாநிலங்களுக்கு இடையிலான பொருட்களை பெற இந்த மின்னணு ரசீது முறையை 2018 ஜூன் 3-ம் தேதிக்குள் எந்தவொரு நாளில் இருந்தும் அமலாக்கிக் கொள்ள மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்த மின்னணு ரசீது முறையின் நோக்கம் வருமாறு:

அ. சுய சேவை முறையில் நாடுமுழுவதற்குமாக மாநிலங்களுக்கு இடையிலும், மாநிலங்களுக்கு உள்ளேயும் பொருட்களை எடுத்துச் செல்ல ஒற்றை மற்றும் ஒருங்கிணைந்த மின்னணு ரசீது முறை.

ஆ. மாநிலங்களிடையே பொருட்களை எளிதாக எடுத்துச் செல்ல உதவும் வகையிலான காகிதப் பயன்பாடற்ற, முற்றிலும் இணைய வழிப்பட்ட முறை.

இ. இத்தகைய சப்ளை மேற்கொள்ளும் சங்கிலித் தொடர் விரைவில் பொருட்களை சப்ளை செய்வதை மேம்படுத்தும் என்பதோடு, இது குறித்த சேவைகள்/புள்ளி விவரங்களை எந்த இடத்தில் இருந்தும் பெற முடியும்.

ஈ. நாடுமுழுவதிலும் இதுவரை இருந்து வந்த மாநிலங்களுக்கு இடையிலான சோதனைச் சாவடிகளை அகற்றுவதன் மூலம் பொருட்களை எளிதாகக் கொண்டுசெல்வதற்கான ஏற்பாடு.

 

Ø பணமதிப்பு ரத்து நடவடிக்கையும் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவருவதும்

முறையாக வரி செலுத்தாமல் இருந்த சமூகத்தை உரிய வரியை செலுத்தும் சமூகமாக இந்தியாவை மாற்றுவது என்பதே பணமதிப்பு ரத்து நடவடிக்கையின் மிகப்பெரும் நோக்கமாக இருந்தது. பொருளாதாரத்தை முறைப்படுத்துவது, கருப்புப் பணத்தின் மீது தாக்குதல் தொடுப்பது என்பதையும் இது உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.

இந்த பணமதிப்பு ரத்து நடவடிக்கையானது பணத்தை ரொக்கமாக வைத்திருந்தவர்கள் அதை வங்கிகளில் செலுத்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியது. இவ்வாறு செலுத்தப்பட்ட பணம், அதன் உரிமையாளர்களின் அடையாளம் காணப்பட்டது  ஆகியவற்றின் விளைவாக 17.42 லட்சம் வங்கிக் கணக்கு உரிமையாளர்களுக்கு துன்புறுத்தல் இல்லாத வகையில் இணைய தளம் வழியாக விவரம் கேட்டு அவர்களிடமிருந்து பதில் பெறப்பட்டது. வங்கிகளில் பெருமளவு பணம் செலுத்தப்பட்டதன்  விளைவாக  வங்கிகளின் கடன்வழங்கும் திறன் மேம்பட்டது. இந்தப் பணத்தில் பெரும்பகுதி பரஸ்பர நிதிகளுக்கும் மேலும் முதலீடு செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. இவ்வாறாக இந்த ரொக்கப்பணம் முறைப்படுத்தப்பட்ட பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாக மாறியது.

 

நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம்

2018 ஜூலையில் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் மேலும் ஒன்பது தன்னிச்சையான முன்கூட்டிய விலைவிதிப்பிற்கான ஒப்பந்தங்களை செய்து கொண்டது. இதன் மூலம் நேரடி வரிகளுக்கான மத்திய வாரியம் செய்து கொண்ட விலைவிதிப்பிற்கான மொத்த ஒப்பந்தங்களின் எண்ணிக்கை 232ஆக உயர்ந்தது. இதில் இருபது இருதரப்பு முன்கூட்டிய விலைவிதிப்பிற்கான ஒப்பந்தங்களும் அடங்கும்.

 

 

Ø நேரடி வரி

அனைத்து வகைப்பட்ட வரிசெலுத்துவோரால் பதிவு செய்யப்பட்ட படிவங்களில் வருமானத்தின் அளவு தொடர்ந்து கடந்த மூன்று மதிப்பீட்டு ஆண்டுகளில் அதிகரித்துக் கொண்டே போனது. 2013-14-ம் நிதியாண்டை அடிப்படையாகக் கொண்ட  மதிப்பீட்டு ஆண்டான 2014-15-ல் தெரிவிக்கப்பட்ட மொத்த வருமானத்தின் மதிப்பு ரூ. 26.92 லட்சம் கோடி ஆகும். இது 2017-18 மதிப்பீட்டு ஆண்டில் ரூ. 44.88 லட்சம் கோடியாக அதாவது 67 சதவீதம் அதிகரித்தது. இது பல்வேறு சட்டரீதியான மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டதன்  விளைவாக வரி ஏய்ப்பிற்கு எதிரான சிறப்பான அமலாக்க நடவடிக்கைகள் உள்ளிட்டு அதிக அளவில் வரிவிதிப்பை மதிக்கும் போக்கு அதிகரித்ததை தெரிவிப்பதாக அமைகிறது.

நிறுவனங்களின் வருமான வரி மற்றும் தனிநபர் வருமான வரி ஆகியவற்றின் வளர்ச்சி விகிதத்தைப் பொறுத்தவரையில் நிறுவனங்களின் வருமான வரி 17.7 சதவீதமும், தனிநபர் வருமான வரி 18.3 சதவீதமும் வளர்ந்துள்ளது.

நேரடி வரிகளுக்கான மத்திய வாரியத்தால் வெளியிடப்பட்ட நேரடி வரி குறித்த புள்ளிவிவரங்களின்படி:

  • கடந்த மூன்றாண்டுகளில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி- நேரடி வரி ஆகியவற்றின் விகிதம் தொடர்ந்து வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இந்த விகிதம் 2017-18 நிதியாண்டில் 5.98 சதவீதமாகும். இது கடந்த 10 ஆண்டுகளில் மிகச் சிறந்த நேரடி வரி- ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகியவற்றுக்கு இடையேயான விகிதம் ஆகும்.
  • கடந்த நான்கு நிதியாண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வருமானவரிப் படிவங்களின் எண்ணிக்கையில் 80 சதவீதத்திற்கும் மேலான வளர்ச்சி உள்ளது. அதாவது 2013-14 நிதியாண்டில் 3.79 கோடியாக இருந்த படிவங்களின் எண்ணிக்கை 2017-18 நிதியாண்டில் 6.85 கோடியாக அதிகரித்துள்ளது.
  • இந்தக்  காலப்பகுதியில் இவ்வாறு வருமான விவரங்களை பதிவு செய்வோரின் எண்ணிக்கையும் 2013-14 நிதியாண்டில் 3.31 கோடியாக இருந்த்து 2017-18 நிதியாண்டில் 5.44 கோடியாக, அதாவது சுமார் 65 சதவீதம் அதிகரித்துள்ளது.

·

 

III. நிதிசார் சேவைகளுக்கான துறை

Ø பொதுத்துறை வங்கிகளில் செயல்படா சொத்துக்களை கையாள்வதற்கான சீர்திருத்தங்கள்:

செயல்படா சொத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதை கவனிக்கும் வகையில் முக்கிய நடவடிக்கைகளையும் சீர்திருத்தங்களையும் அரசு மேற்கொண்டது. அவை கீழ்வருமாறு விவரிக்கப்படுகின்றன:

  1. பொதுத்துறை வங்கிகளின் மறு முதலீட்டு ஏற்பாடுகள்
  2. பொதுத்துறை வங்கிக் கடன்களுக்கான ஒரே சந்தை ஏற்பாடு
  3. மண்டல அளவிலான கிராமப்புற வங்கிகளை வலுப்படுத்துவது.

Ø அரசின் சீர்திருத்த முயற்சிகளுக்கு உலக அளவிலான அங்கீகாரம்

 

Ø தேசிய ஓய்வூதிய அமைப்பினை சீரமைத்தல்

2018 டிசம்பர் 6 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் கீழ்க்கண்ட விஷயங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன:

Ø நிதிசார் அமைப்புகளில் இணைத்துக் கொள்வது

நிதிசார் சேவைகளில் இணைத்துக் கொள்வதன் ஒரு பகுதியாக ‘ஜன் தன் தர்ஷக்’ என்ற கைபேசி செயலியை நிதி அமைச்சகம் அறிமுகப்படுத்தியது.

நிதிசார் சேவைகளில் இணைத்துக் கொள்ளும் முயற்சியின் ஒரு பகுதியாக நிதி சார் சேவைகள் துறை, நிதி அமைச்சகம் மற்றும் தேசிய தகவல் தொழில்நுட்ப மையம் ஆகியவை இணைந்து ’ஜன் தன் தர்ஷக்’ என்ற கைபேசி செயலியை உருவாக்கின. நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிதி சார் சேவையை பெறுவதற்கான மையத்தை கண்டறிய பொதுமக்களுக்கு உதவுவதாக இந்தச் செயலி அமைந்துள்ளது.

 

 

Ø முக்கிய திட்டங்களும் அவற்றின் மேம்பாடும்:

கிசான் கடன் அட்டைகள் வழங்குதல்

2017-18 காலப்பகுதியில் தனிப்பட்ட காப்பீடுகள் மற்றும் முதல் ஆண்டு பிரிமியத் தொகை ஆகிய இரண்டு வகைகளிலுமே சாதகமான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

பிரதமர் ஜன் தன் திட்டம்: இத்திட்டத்தின் கீழ் இதுவரையில் 33.4 கோடி பயனாளர்கள் வங்கிக் கணக்கை தொடங்கியுள்ளனர். 2018 டிசம்பர் 17 வரையில் இந்தப் பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ. 85,494. 69 கோடி கையிருப்பு உள்ளது.

வருமானத்தை இரட்டிப்பாக்கும் பிரதமர் திட்டத்தின் காலக்கெடு 2020 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலீட்டிற்கான வட்டி வருவாய் விதிவிலக்கு வரம்பு ரூ. 50,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் முதலீட்டு வரம்பு ரூ. 15 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பெண் குழந்தைகளின் மேன்மைக்கான கணக்குத் திட்டம்: 2018 ஜூன் 30 வரையில் நாடு முழுவதிலும் 1.39 கோடி கணக்குகள் பெண் குழந்தைகளின் பெயரில் தொடங்கப்பட்டுள்ளன. ரூ. 25,979.62 கோடி இந்தக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளது.

அடல் ஓய்வூதியத் திட்டம்: இத்திட்டத்தின் கீழ் தொகை செலுத்துவோரின் எண்ணிக்கை 1.24 கோடியை கடந்து விட்டது. இந்த 2018-19 நிதியாண்டில் (2018 நவம்பர் 2 வரை) 27 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இத்திட்டத்தில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

பிரதமர் விபத்துக்கான காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம்

பிரதமர் விபத்துக்கான காப்பீட்டுத் திட்டம்: வங்கிகள் பதிவு செய்துள்ள புள்ளிவிவரங்களின்படி இத்திட்டத்தின் கீழ் 2018 அக்டோபர் 31 வரை 14.27 கோடி பேர் பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் தொழிலுக்கான கடன் வசதித் திட்டம்

2015 ஏப்ரல் 8-ம் தேதியன்று மாண்புமிகு பிரதமர் அவர்களால் தொடங்கப்பட்ட பிரதமர் தொழிலுக்கான கடன் வசதித் திட்டத்தில்  பெருநிறுவனம் அல்லாத, விவசாயம் அல்லாத சிறு/குறு நிறுவனங்களுக்கு ரூ. 10 லட்சம் வரையில் கடன் வழங்கப்படும். 2018-19 நிதியாண்டில் மொத்தம் 2,92,30,665 கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. கடன் தொகையின் அளவு ரூ. 1,53,783.83 கோடி ஆகும். இதில் 2018 டிசம்பர் 14 வரையில் ரூ. 1,47,115.20 கோடி கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது.

 

 



(Release ID: 1558476) Visitor Counter : 417


Read this release in: English , Hindi , Bengali