பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
பிரதமர் உஜ்வாலா திட்டத்தில் 6 கோடி பயனாளிகள்: குடியரசுத் துணைத்தலைவர் இணைப்பை வழங்கினார்
प्रविष्टि तिथि:
02 JAN 2019 12:08PM by PIB Chennai
பிரதமர் உஜ்வாலா திட்டத்தின் எண்ணிக்கையில் 6 கோடியை எட்டிய பயனாளியான தில்லியை சேர்ந்த திருமதி ஜஸ்மினா கட்டுனிடம் குடியரசுத்துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடு இன்று புதுதில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சமையல் எரிவாயு (எல்.பி.ஜி) இணைப்பை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்வேறு பயனாளிகளுக்கு இத்திட்டத்தின் கீழ் எல்.பி.ஜி. இணைப்பு வழங்கப்பட்டது.
பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதானை பாராட்டிப் பேசிய குடியரசுத் துணைத்தலைவர், 6 கோடி இலக்கை அடைவதற்காக அமைச்சகம் மற்றும் எண்ணெய் விற்பனை நிறுவன அலுவலர்களின் கூட்டுமுயற்சியைப் பாராட்டினார். மேலும், தேசப்பிதா மகாத்மா காந்தியின் கனவான ஏழைகளுக்கும் சமூகத்தின் கடைநிலை மனிதனும் பலனடையும் வகையில் இத்திட்டம் உள்ளது என்று கூறினார். இத்திட்டம் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுவதுடன், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கிறது என்றும் குடியரசுத்துணைத் தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான், எல் பி ஜி திட்டம் தொடங்கி ஐம்பது ஆண்டுகளில் வெறும் 13 கோடி இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன என்றும், கடந்த 54 மாதங்களில் மட்டும் ஏறத்தாழ இதே அளவில் இணைப்புகளை இந்த அரசு வழங்கியுள்ளது என்றும் கூறினார். பிரதமர் உஜ்வாலா திட்டத்தை சர்வதேச அமைப்புகளும், வளர்ந்த நாடுகளும் பாராட்டி வருகின்றன. மேலும் இத்திட்டம் வளர்ந்து வரும் உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளது என்றும் அவர் கூறினார்.
------
விகீ / அரவி / கீதா
(रिलीज़ आईडी: 1558115)
आगंतुक पटल : 329